ETV Bharat / state

ஆபாசப் படங்களை பார்ப்பது குற்றமல்ல.. சென்னை உயர் நீதிமன்றம் கூறியது என்ன? - MHC about Pornography among youths

pornography: ஆபாசப் படங்களை பதிவிறக்கம் செய்து பார்ப்பது என்பது சட்டப்படி குற்றமல்ல என்றும், அந்தப் படங்களை மற்றவர்களுக்கு அனுப்பி வைப்பதுதான் குற்றம் எனவும் சென்னை உயர் நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.

Etv Bharat
Etv Bharat
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 13, 2024, 11:42 AM IST

சென்னை: சென்னை அம்பத்தூரைச் சேர்ந்த இளைஞர் ஒருவர், தனது கைபேசியில் குழந்தைகள் தொடர்பான ஆபாசப் படங்களை பதிவிறக்கம் செய்து பார்த்ததாக, அம்பத்தூர் காவல் நிலையத்தினர் தகவல் தொழில்நுட்பச் சட்டம் மற்றும் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர். திருவள்ளூர் போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ள இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி, அந்த இளைஞர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார்.

இந்த நிலையில், இந்த வழக்கு நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது இந்தச் சம்பவத்தில் தொடர்புடைய இளைஞர் நேரில் ஆஜராகி, குழந்தைகள் சம்பந்தப்பட்ட ஆபாசப் படங்களை தான் பார்க்கவில்லை என்றும், ஆபாசப் படம் பார்க்கும் பழக்கத்தில் இருந்து விடுபடுவதற்காக மனநல ஆலோசனை செல்ல விரும்புவதாக தெரிவித்தார்.

இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி, ஆபாசப் படங்களை பதிவிறக்கம் செய்து பார்ப்பது என்பது சட்டப்படி குற்றமல்ல. அந்தப் படங்களை மற்றவர்களுக்கு அனுப்பி வைப்பதுதான் குற்றம் எனக்கூறி, இளைஞர் மீதான வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டார். மேலும், 90ஸ் கிட்ஸ்கள் எப்படி மது, புகைக்கு அடிமையாகி இருந்தார்களோ, அதேபோல 2கே கிட்ஸ் ஆபாசப் படங்களுக்கு அடிமையாகியுள்ளனர். இதற்காக அவர்கள் மீது பழி சொல்வதற்கு பதில், இந்த பழக்கத்தில் இருந்து மீட்பதற்கு அறிவுரைகள் வழங்கும் அளவுக்கு சமூகம் பக்குவமடைய வேண்டும்.

பள்ளிகளில் இருந்து, இது தொடர்பாக அவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். ஒரு பொத்தானை அழுத்துவதன் மூலம் அனைத்து தரவுகளையும் எந்த தணிக்கையும் இல்லாமல் பெற வகை செய்யும் கைபேசி போன்ற சாதனங்களால், இளம் தலைமுறையினர் புதிய சவால்களை எதிர்கொண்டுள்ளனர்.

ஆபாசப் படங்கள் எளிதில் கிடைப்பதால் இந்த தலைமுறையினர் அதற்கு அடிமையாகி விடுகின்றனர். 10-இல் 9 சிறுவர்கள் ஆபாசப் படங்களை பார்ப்பதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. ஆபாசப் படங்களை பார்ப்பதால் உளவியல் ரீதியாகவும், உடல் ரீதியாகவும் டீன் ஏஜ் என சொல்லக்கூடிய பதின்ம வயது குழந்தைகள் பாதிக்கpபடுகின்றனர் எனவும் நீதிபதிகள் குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க: டெல்லி மதுபான ஊழல் வழக்கு: அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அமலாக்கத்துறை 4வது முறை சம்மன்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.