ETV Bharat / state

கோடநாடு வழக்கில் எடப்பாடி பழனிசாமியை இணைத்து பேச தனபாலுக்கு தடை! - ஜெயலலிதாவின் கோடநாடு எஸ்டேட் வழக்கு

Kodanad case: கோடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கில் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை இணைத்து பேசிய வழக்கில், குற்றம் சாட்டப்பட்ட கனகராஜின் சகோதரர் தனபாலுக்கு இடைக்கால தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

kodanad murder case
கொடநாடு வழக்கில் எடப்பாடியை இணைத்து பேச தனபாலுக்கு தடை
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 26, 2023, 12:33 PM IST

சென்னை: மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் கோடநாடு எஸ்டேட் கொலை மற்றும் கொள்ளை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு, சாலை விபத்தில் உயிரிழந்த கனகராஜின் சகோதரர் தனபால் சமீப காலமாக அந்த வழக்கு தொடர்பாக பேட்டியளித்து வருகிறார். அது தொடர்பான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது.

பின்னர் கோடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கில் தன்னை தொடர்புப்படுத்தி பேச கனகராஜின் சகோதரர் தனபாலுக்கு தடை விதிக்கக் கோரியும், 1 கோடியே 10 லட்சம் ரூபாய் மான நஷ்ட ஈடு வழங்கக் கோரியும் முன்னாள் முதலமைச்சரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி சென்னை உயர் நீதின்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.

அந்த மனுவில், அதிமுகவின் பொதுச் செயலாளராக பொறுப்பேற்றுள்ள நிலையில், தன் நற்பெயருக்கு களங்கம் கற்பிக்கும் வகையில் தனபால் பொய்யான தகவல்களை சமூக வளைதளங்களில் கூறி வருகிறார். மேலும் வரும் 2024 ஆம் ஆண்டு மக்களவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அதிமுகவுக்கு மக்கள் மத்தியில் இருக்கும் செல்வாக்கை சீர்குலைக்கும் நோக்கத்தில், தனது அரசியல் எதிரிகளின் தூண்டுதலால் தனபால் இதுபோல் பேட்டிகள் அளித்து வருவதாகவும் எடப்பாடி பழனிசாமி தனது மனுவில் சுட்டிக் காட்டியுள்ளார்.

மேலும், கோடநாடு வழக்கில் சாட்சிகளை கலைத்ததாக கைது செய்யப்பட்ட தனபால், மனநோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறி நீதிமன்றத்தில் ஜாமீன் பெற்றுள்ளதாகவும் மனுவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. தற்போது இந்த வழக்கு நீதிபதி மஞ்சுளா முன்பு இன்று (செப்.26) விசாரணைக்கு வந்தது. அப்போது, எடப்பாடி பழனிசாமி தரப்பில் தனபால் தொடர்ந்து அவதூறாக பேசி வருவதாகவும், அதற்கு தடை விதிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து நீதிபதி பிறப்பித்த உத்தரவில், எடப்பாடி பழனிசாமியை வழக்கில் இணைத்து பேச தனபாலுக்கு தடை விதித்து வழக்கை 2 வாரத்திற்கு ஒத்திவைத்தார்.

இதையும் படிங்க: Thirumavalavan : திருமாவளவன் மருத்துவமனையில் அனுமதி! என்ன காரணம்?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.