ETV Bharat / state

தமிழக மருத்துவக் கல்வி இயக்குநர் நியமனத்தில் முறைகேடா? சுகாதாரத்துறை பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு! - கோ வாரண்டோ மனு

Directorate of Medical Education and Research: தமிழ்நாடு மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்குநராக டாக்டா் ஜெ.சங்குமணி நியமிக்கப்பட்டதற்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்ட கோ வாரண்டோ மனுவில் தமிழ்நாடு சுகாதாரத்துறை பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

madras-high-court-quo-warranto-on-medical-director-sangumani-appointment-notice-to-state-reply
தமிழக மருத்துவக் கல்வி இயக்குநர் நியமனம் குறித்து வழக்கு, தமிழக சுகாதாரத்துறை பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு!
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 24, 2023, 6:25 PM IST

சென்னை: தமிழ்நாடு மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்குநராக டாக்டா் ஜெ.சங்குமணி நியமிக்கப்பட்டது தொடர்பாகத் தாக்கல் செய்யப்பட்டுள்ள கோ வாரண்டோ மனு குறித்து தமிழக சுகாதாரத்துறை பதிலளிக்கச் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழ்நாடு மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்குநராக டாக்டா் ஜெ.சங்குமணி நியமிக்கப்பட்டுள்ள நிலையில், அவர் எந்த தகுதியின் அடிப்படையில் நியமிக்கப்பட்டார்? என விளக்கம் அளிக்கக் கோரி தூத்துக்குடியைச் சேர்ந்த சமூக ஆர்வலர் சென்னை உயர்நீதிமன்றத்தில் கோ வாரண்டோ மனுத் தாக்கல் செய்துள்ளார்.

தமிழ்நாடு மருத்துவக் கல்லூரி இயக்குநர் என்பது, தமிழகத்தில் உள்ள மருத்துவக் கல்லூரிகளின் நிர்வாகம், மாணவர்களுக்கான இட ஒதுக்கீடு உள்ளிட்டவற்றை நிர்வகிக்கும் முக்கியப் பணி என மனுவில் கூறியுள்ளார். இந்நிலையில், பணி மூப்பு உள்ளிட்ட எந்த விதிகளும் இல்லாமல் மருத்துவ கல்வி இயக்குநராக சங்குமணி நியமிக்கப் பட்டுள்ளதாக மனுவில் கூறியுள்ளார்.

மதுரை மருத்துவக்கல்லூரி முதல்வராக சங்குமணி பணியாற்றிய போது கூடுதல் விலைக்கு உபகரணங்கள் வாங்கியதாகப் புகார் எழுந்ததாகவும், அது தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டதாகவும் மனுவில் குறிப்பிட்டுள்ளார். எனவே மருத்துவக்கல்லூரி இயக்குநராக செயல்பட சங்குமணிக்குத் தகுதியில்லை என அறிவித்து அவர் செயல்படத் தடை விதிப்பதோடு, அவரை நியமித்துப் பிறப்பிக்கப்பட்ட அரசாணையை ரத்து செய்ய வேண்டுமெனவும் மனுவில் கோரியிருந்தார்.

இந்த மனு நீதிபதி எம்.எஸ். ரமேஷ் முன்பு இன்று (நவ. 24) விசாரணைக்கு வந்தது. அப்போது மனு குறித்து சுகாதாரத் துறை முதன்மை செயலாளர் மற்றும் சங்குமணி ஆகியோர் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஜனவரி மாதத்திற்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.

இதையும் படிங்க: “பக்தி இல்லை, பகல் வேஷம் போடுகின்றனர்” - நிர்மலா சீதாராமன் பேச்சுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் பதிலடி!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.