ETV Bharat / state

நீட்டில் மதிப்பெண் குறைந்த விவகாரம்: மாணவிக்கு அசல் விடைத்தாளைக் காட்ட உத்தரவு!

நீட் தேர்வு மதிப்பெண் குளறுபடி விவகாரத்தில் அசல் விடைத்தாளை மாணவிக்கு காட்ட சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நீட் தேர்வு விவகாரம்:மாணவிக்கு அசல் விடைத்தாள் காட்ட- சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!

author img

By

Published : Oct 3, 2022, 6:37 PM IST

சென்னை: நீலகிரி மாவட்டத்தைச்சேர்ந்த கிறிஸ்மா விக்டோரியா என்கிற மாணவி தாக்கல் செய்த மனுவில், 'கடந்த ஜூலை மாதம் நடந்த நீட் தேர்வுக்கான விடைத்தாள்கள் கடந்த ஜூலை 31ஆம் தேதி வெளியிடப்பட்டன. அதில் 720 மதிப்பெண்களுக்கு 196 மதிப்பெண்கள் பெற்றுள்ளதாக குறிப்பிடப்பட்டிருந்ததாகவும், பின்னர் செப்டம்பர் 7ஆம் தேதி வெளியிடப்பட்ட நீட் தேர்வின் மதிப்பெண் பட்டியலில் 65 மதிப்பெண் பெற்றுள்ளதாக குறிப்பிட்டுள்ளதால், தனது விடைகள் முறையாக மதிப்பிடப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்க, அசல் விடைத்தாளை காண்பிக்க தேசிய தேர்வு முகமைக்கு உத்தரவிட வேண்டும்' எனக் கோரியுள்ளார்.

இந்த மனு நீதிபதி சுரேஷ்குமார் முன் விசாரணைக்கு வந்த போது, மனுதாரர் நொய்டாவில் உள்ள தேசிய தேர்வு முகமை அலுவலகத்துக்கு வந்தால் விடைத்தாளை சரிபார்ப்பதற்காக காண்பிக்கத் தயாராக இருப்பதாக தேசியத் தேர்வு முகமை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதைப்பதிவு செய்து கொண்ட நீதிபதி, நொய்டாவில் உள்ள தேசியத்தேர்வு முகமை அலுவலகத்தில் விடைத்தாளை காண்பிப்பதற்கான தேதியை, 10 நாட்களில் நிர்ணயித்து மனுதாரருக்கு தெரிவிக்க வேண்டும் என தேசிய தேர்வு முகமைக்கு உத்தரவிட்டார்.

அந்த தேதியில் நொய்டா வரும் மாணவிக்கு அசல் விடைத்தாளைக் காண்பிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டு, வழக்கை முடித்து வைத்தார்.

இதையும் படிங்க:TNPL தமிழ்நாடு செய்தித்தாள் மற்றும் காகிதங்கள் லிமிடெட் நிறுவனத்தில் வேலை!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.