ETV Bharat / state

மணல் விற்பனை முறைகேடு; அமலாக்கத்துறை அனுப்பிய சம்மனை ரத்து செய்யக் கோரிய மனு மீதான தீர்ப்பு ஒத்திவைப்பு! - அரசு மணல் குவாரி சோதனை

Private companies petitions to quash summon by ED: சட்டவிரோத மணல் விற்பனை முறைகேடு தொடர்பாக பதிவு செய்யப்பட்ட வழக்கில், அமலாக்கத்துறை அனுப்பிய சம்மனுக்கு தடை விதிக்கக் கோரி தனியார் நிறுவன பங்குதாரர்கள் தொடர்ந்த வழக்கில் தீர்ப்பை சென்னை உயர் நீதிமன்றம் தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்துள்ளது.

மணல் கொள்ளை வழக்கு: அமலாக்கத்துறை நேரில் ஆஜராகக் கோரிய சம்மனுக்குத் தடை கோரி தனியார் நிறுவன உரிமையாளர் தொடர்ந்த வழக்குத் தீர்ப்பிற்காக ஒத்தி வைப்பு..!
mhc-order-reserved-private-companies-petitions-to-quash-summon-by-ed-about-sand-mining-scam
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 30, 2023, 8:40 PM IST

சென்னை: தமிழ்நாட்டில் உள்ள மணல் குவாரிகளில் அரசு நிர்ணயித்த அளவைவிட கூடுதலாக மணல் அள்ளி விற்பனை செய்ததாகவும், மணல் ஒப்பந்த குவாரிகளில் வந்த வருமானத்தை சட்டவிரோதமாகப் பரிமாற்றம் செய்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்திருந்தது.

இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த அமலாக்கத்துறை, பல்வேறு அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் சோதனைகள் நடத்தி, பல்வேறு ஆவணங்களைப் பறிமுதல் செய்துள்ளது. இது தொடர்பாக விசாரணைக்கு ஆஜராகுமாறு ஐ.ஏ.எஸ் அதிகாரிகளுக்கு சம்மன் அனுப்பப்பட்டது. அதனை எதிர்த்து தமிழக அரசு தாக்கல் செய்த மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், சம்மனுக்கு இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில், இந்த வழக்கில் ஆர்.எஸ் கட்டுமான நிறுவனத்தின் பங்குதாரர்களான சென்னையைச் சேர்ந்த ராஜ்குமார், புதுக்கோட்டையைச் சேர்ந்த சண்முகம் ராமச்சந்திரன் மற்றும் திண்டுக்கல்லைச் சேர்ந்த ரத்தினம் ஆகியோருக்கும் அமலாக்கத்துறை தனித்தனியாக சம்மன் அனுப்பியிருந்தது.

அமலாக்கத்துறை அனுப்பிய சம்மனை ரத்து செய்யக்கோரி மூவரும் தாக்கல் செய்த மனுக்கள், நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தர் மற்றும் சுந்தர் மோகன் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர்கள் சார்பில், அமலாக்கத்துறையின் வழக்கில் தங்களது பெயர் சேர்க்கப்படாத நிலையில் தங்களுக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளதாகவும், அதனால் அவசர கதியில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

அமலாக்கத்துறை சார்பில், அமலாக்கத்துறை மேற்கொண்ட விசாரணையில் பல ஆவணங்கள் கைப்பற்றப்பட்டது. அதன் விசாரணை ஆரம்பக் கட்டத்தில் இருப்பதால், மூவரும் விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டுமெனத் தெரிவிக்கப்பட்டது. மேலும், சம்மனை ரத்து செய்யக்கூடாது என்றும் தெரிவிக்கப்பட்டது. இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், வழக்கின் தீர்ப்பைத் தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்து உத்தரவிட்டனர்.

இதையும் படிங்க: 1,500 பேருக்கு வெள்ள நிவாரணம் வழங்கிய நடிகர் விஜய்.. தூத்துக்குடியில் உயிரிழந்தவருக்கு ரூ.1 லட்சம் நிதியுதவி!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.