ETV Bharat / state

’அனுமதியில்லாமல் செயல்படும் இறைச்சிக் கடைகளை அகற்ற வேண்டும்’ - உயர் நீதிமன்றம் - அனுமதியில்லாமல் செயல்படும் இறைச்சி கடைகளை அகற்ற வேண்டும் - உயர்நீதிமன்றம்

திருப்பூர் மாநகராட்சி எல்லைக்கு உள்பட்ட பகுதியில் அனுமதியின்றி செயல்பட்டு வரும் கடைகளை ஜூலை 15ஆம் தேதிக்கு மேல் அகற்ற நடவடிக்கை எடுக்க, திருப்பூர் மாநகராட்சிக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அனுமதியில்லாமல் செயல்படும் இறைச்சி கடைகளை அகற்ற வேண்டும்

author img

By

Published : Jul 9, 2021, 5:12 PM IST

சென்னை : திருப்பூர் மாநகராட்சியில் உள்ள 368 இறைச்சிக் கடைகளில், 26 கடைகள் எந்த அனுமதியுமின்றி ஊரடங்கு காலத்திலும் இயங்கி வருவதாகவும், அக்கடைகளை மூட நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் எனவும் கோரி திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த இந்து முன்னேற்ற கழகத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் கோபிநாத் மனு தாக்கல் செய்தார்.

இந்த மனு, தலைமை நீதிபதி சஞ்ஜீப் பானர்ஜி, செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று (ஜூலை.9) விசாரணைக்கு வந்தது.

அப்போது திருப்பூர் மாநகராட்சி சார்பில், அனுமதியின்றி செயல்படும் இறைச்சிக் கடைகளை அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும், அது குறித்து அறிக்கை தாக்கல் செய்ய கால அவகாசம் வேண்டும் எனவும் கோரப்பட்டது.
சென்னை உயர்நீதிமன்றம்
சென்னை உயர் நீதிமன்றம்
இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதிகள், கரோனா இரண்டாம் அலை பரவல் காரணமாக ஆக்கிரமிப்புகளை அகற்ற இடைக்காலத் தடை விதிக்கப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டினர். தொடர்ந்து, ஜூலை 15 ஆம் தேதிக்கு பிறகு அனுமதியில்லாமல் செயல்படும் இறைச்சிக் கடைகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் திருப்பூர் மாநகராட்சிக்கு உத்தரவிட்டு வழக்கு விசாரணையை நான்கு வாரத்துக்கு தள்ளி வைத்தனர்.

இதையும் படிங்க : இடஒதுக்கீடு தொடர்பான இஸ்லாமியர்களின் வழக்கு தள்ளுபடி

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.