ETV Bharat / state

கோயில் சொத்துகள் மீட்கப்பட வேண்டும்: இந்து அறநிலையத்துறைக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு! - chennai news

சட்டவிரோதமாக விற்கப்பட்ட கோயில் நிலங்களின் ஆவணங்களை சேகரித்து, அவற்றை மீட்கக்கோரி இந்து சமய அறநிலையத்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

madras-high-court-has-directed-the-hindu-religious-endowments-department-to-seek-recovery-of-illegally-sold-temple-lands

author img

By

Published : Jul 18, 2023, 5:07 PM IST

சென்னை: தமிழகத்தில் சட்டவிரோதமாக விற்கப்பட்ட கோயில் சொத்துகளைப் பற்றிய ஆவணங்களை சேகரித்து மீட்கக்கோரி சென்னை உயர் நீதிமன்றம் இந்து சமய அறநிலையத்துறைக்கு உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்திலுள்ள சேர, சோழ, பாண்டிய, பல்லவ மன்னர்கள் ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்ட கோயில்கள் மற்றும் பழமையான கோயில்கள் அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ளன. இந்து சமய அறநிலையத் துறை என்பது தமிழ்நாட்டில் இந்து சமய திருக்கோயில்களின் வளர்ச்சிக்காகத் தனித்துறையாக தமிழ்நாடு அரசால் தொடங்கப்பட்டு நடத்தப்பட்டு வருகிறது.

இத்துறைக்கு, மாநில அளவில் ஒரு செயலகம் தலைமைச்செயலகத்தில் உள்ளது. மேலும் தமிழகத்தில் கோவில் பராமரிப்பு, நிர்வாகப் பணிகள் மேற்கொள்ள வசதியாக, இந்து சமய அறநிலையத்துறை சேலம், கோவை, திருநெல்வேலி, மதுரை, சென்னை, விழுப்புரம், தஞ்சாவூர், திருச்சி, சிவகங்கை, மயிலாடுதுறை என, 10 மண்டலங்களாக பிரிக்கப்பட்டுள்ளன. பராமரிப்பு, கோயில் சொத்துகளைப் பாதுகாத்தல், பக்தர்களுக்குத் தேவையான வசதிகளைச் செய்து கொடுத்தல் ஆகியவையும் இந்து சமய அறநிலையத் துறையின் கடமையாக உள்ளது.

இந்நிலையில் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தனது சொத்துகளுக்கான பட்டாவை வழங்க உத்தரவிடக் கோரி குமார் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். இந்த வழக்கை நீதிபதி எஸ்.எம். சுப்பிரமணியம் விசாரித்தார். நடத்தப்பட்ட விசாரணையில் குறிப்பிட்ட அந்த நிலமானது, நுங்கம்பாக்கத்தில் உள்ள அகத்தீஸ்வரர் பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோயிலுக்குச் சொந்தமான நிலம் என்பது தெரியவந்தது. அதன் காரணமாக கோயிலுக்குச் சொந்தமான நிலத்திற்கு பட்டா வழங்க இந்து சமய அறநிலையத்துறை ஆட்சேபனை தெரிவித்ததாக அவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: தேனி மருத்துவமனை வளாகத்தில் பொதுமக்களை அச்சுறுத்தும் நாய்கள்..நடவடிக்கை எடுக்குமா நிர்வாகம்?

இந்த நிலையில் மனுதாரர் குமார் மனுவை திரும்பப் பெற்றுக்கொள்வதாக அவர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அதற்கு அறநிலையத்துறை இந்த வழக்கானது கோயில் நிலத்தை அபகரிக்கும் நோக்கோடு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது என அவர்கள் தரப்பில் இருந்து கடும் எச்சரிக்கை தெரிவிக்கப்பட்டது.

இதனை அடுத்து, தமிழகம் முழுவதும் உள்ள கோயில் நிலங்களானது அறநிலையத்துறைக்கு தெரியாமல், அறங்காவலர்களால் சட்டவிரோதமாக மூன்றாம் நபருக்கு விற்கப்பட்டு உள்ளது, இது சம்பந்தமாக அறநிலையத் துறை விசாரணை நடத்தி, ஆவணங்களை சேகரித்து மீட்க வேண்டும் எனவும்; மேலும் தானம் அளித்தவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் வகையில், கோயில் சொத்துகளை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் உத்தரவிட்டுள்ளார்.

பேராசை பிடித்த சிலரின் இந்த மோசடியில் நிலங்களை வாங்கியவர்களும் பாதிக்கப்படுகின்றனர். இருப்பினும், அவர்களுக்கு கருணை காட்ட முடியாது எனக் கூறிய நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

இதையும் படிங்க: ஆக.17-இல் ரத்த கையெழுத்து இயக்கம் - தமிழ்நாடு சத்துணவு ஊழியர்கள் சங்கம்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.