ETV Bharat / state

முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாருக்கு நிபந்தனை ஜாமீன் - நிபந்தனை ஜாமீன் வழங்கி நீதிபதி உத்தரவிட்டார்

நில அபகரிப்பு வழக்கில் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாருக்கு திருச்சி கண்டோன்மென்ட் பகுதியில் தங்கி இருக்க வேண்டும். அங்கு உள்ள காவல் நிலையத்தில் வாரத்தில் மூன்று நாட்கள் கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனையுடன் ஜெயக்குமாருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி நீதிபதி உத்தரவிட்டார்.

aa
madras high court granted bail for former minister Jayakumar, chennai high court granted bail for admk ex minister Jayakumar
author img

By

Published : Mar 11, 2022, 12:37 PM IST

Updated : Mar 11, 2022, 1:05 PM IST

சென்னை துரைப்பாக்கதில் 8 கிரவுண்ட் நில உரிமை தொடர்பாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் மருமகனான நவீன்குமார் என்பவருக்கும், அவரது சகோதரர் மகேஷ்குமார் என்பவருக்கும் பிரச்சினை இருந்துவந்தது. முன்னாள் அமைச்சர் ஜெயகுமார், தனது செல்வாக்கைப் பயன்படுத்தி அடியாட்கள் மூலம் மிரட்டி நிலத்தை அபகரித்துக் கொண்டதாகவும், கொலை மிரட்டல் விடுத்ததாகவும் மகேஷ் குமார் காவல்நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.

இது தொடர்பான வழக்கில் ஜெயக்குமார் கைது செய்யப்பட்டு, ஆலந்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு மார்ச் 11 வரை நீதிமன்ற காவலில் அடைக்கப்பட்டார். இந்த வழக்கில் அவரது ஜாமீன் மனுவை செங்கல்பட்டு முதன்மை அமர்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்த நிலையில், ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மார்ச் 8 ஆம் தேதி ஜெயக்குமார் மனு தாக்கல் செய்துள்ளார்.

முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாருக்கு நிபந்தனை ஜாமீன்

அவரது மனுவில், தனது மருமகன் நவீன்குமாரும், அவரது சகோதரர் மகேஷ் பங்குதாரர்களாக உள்ள மீன்பிடி வலை தயாரிக்கும் நிறுவன நிர்வாகத்தில் கருத்து வேறுபாடு காரணமாக, இருவரும் பிரிந்துவிட்டதாகக் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பான சிவில் வழக்கு ஆலந்தூர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளபோது, எவ்வித தொடர்பும் இல்லாத தான் கைது செய்யப்பட்டிருப்பதாக மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

ஆளுங்கட்சியைச்சேர்ந்த மகேஷ் குமாரின் அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையாகத் தன்னை இந்த வழக்கில் தவறாக இணைத்துள்ளதாகவும் மனுவில் குறிப்பிட்டுள்ளார். முன்னாள் அமைச்சரான தனது நற்பெயருக்கு ஊறு விளைவிக்கும் நோக்குடன் பதிவான வழக்கில் கைது செய்யப்பட்டு உள்ளதால், ஜாமீன் வழங்க வேண்டும் என கோரி இருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி ஜெகதீஷ்சந்திரா முன்பு (மார்ச்.8) விசாரணைக்கு வந்தது. அப்போது காவல்துறை மற்றும் மகேஷ்குமார் தரப்பில் ஜாமீன் வழங்கக் கூடாது என எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, காவல்துறை மற்றும் மகேஷ்குமார் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை இன்று (மார்ச் 11) நீதிபதி ஒத்திவைத்தார்.

இதனையடுத்து இந்த வழக்கு மீண்டும் இன்று நீதிபதி ஜெகதீஷ் சந்திரா முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, காவல் துறை சார்பில் ஆஜரான வழக்கறிஞர் கோகுல், கடந்த ஆட்சி அதிமுக ஆட்சி என்பதால் சரியாக விசாரிக்கவில்லை. அமைச்சர் ஜெயக்குமார் சட்டத்தைக் கையில் எடுத்துக்கொண்டார். எனவே, ஜாமீன் வழங்கக் கூடாது என எதிர்ப்பு தெரிவித்தார். புகார்தாரர் தரப்பிலும் ஜாமின் வழங்க எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

இருதரப்பு வாதங்களைக் கேட்ட நீதிபதி, முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார். ஜெயக்குமார் திருச்சி கண்டோன்மென்ட் பகுதியில் தங்கி இருக்க வேண்டும். அங்கு உள்ள காவல் நிலையத்தில் வாரத்தில் மூன்று நாட்கள் கையெழுத்திட வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

இதையும் படிங்க: வெற்றியுடன் தாய் மண்ணுக்கு திரும்பிய பிரதமர் - வழிநெடுக உற்சாக வரவேற்பு

Last Updated : Mar 11, 2022, 1:05 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.