ETV Bharat / state

மனித உரிமைகள் ஆணைய தலைவர் பதவி நியமனம் தொடர்பான வழக்கு தள்ளுபடி! - மனித உரிமை ஆணைய தலைவர் பதவி நியமனம் தொடர்பான வழக்கு தள்ளுபடி

தமிழ்நாடு மாநில மனித உரிமைகள் ஆணைய தலைவராக ஓய்வு பெற்ற நீதிபதி பாஸ்கரனை நியமித்ததை எதிர்த்து தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

உயர் நீதிமன்றம்
உயர் நீதிமன்றம்
author img

By

Published : Apr 27, 2021, 2:59 PM IST

கடந்த 2019ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் முதல் காலியாக இருந்த தமிழ்நாடு மாநில மனித உரிமைகள் ஆணைய தலைவர் பதவிக்கு சென்னை உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி எஸ்.பாஸ்கரனை நியமித்து, டிசம்பர் 30ஆம் தேதி தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்தது.

இவரது நியமனத்தை எதிர்த்து சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் லோகேஸ்வர் வழக்கு தொடர்ந்துள்ளார். அந்த மனுவில், வெளிப்படையான அறிவிப்பு வெளியிடாமல், தகுதியானவர்கள் பெயர்களை பரிசீலிக்காமல், சட்ட அமைச்சரின் பரிந்துரை அடிப்படையில் நீதிபதி பாஸ்கரன் நியமிக்கப்பட்டுள்ளதாக குற்றஞ்சாட்டியிருந்தார். நியமனம் செய்யும்போது, தலைமை நீதிபதியுடன் ஆலோசித்து பெறவில்லை என்றும் குறிப்பிட்டிருந்தார்.

இந்த மனு தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, அரசு தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் விஜய்நாரயண், பதவியில் இருக்கக்கூடிய உயர் நீதிமன்றம், மாவட்ட நீதிபதிகளை நியமிக்கும் போது மட்டுமே தலைமை நீதிபதியிடம் கலந்தாலோசிக்க வேண்டும் என்று சட்ட விதிகளில் உள்ளது எனவும், ஓய்வு பெற்ற நீதிபதியை நியமிக்கும் போது தலைமை நீதிபதியுடன் ஆலோசிக்க வேண்டிய தேவையில்லை என்றும் தெரிவித்தார்.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட தலைமை நீதிபதி அமர்வு, தவறான புரிதலோடு இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளதாகக் கூறி வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.