கரோனா ஊரடங்கால் அனைத்து மத வழிபாட்டு தலங்களும் தற்போது மூடப்பட்டுள்ளன. இந்நிலையில், ஓரிரு நாட்களில் இஸ்லாமியர்களின் புனித பண்டிகையான ரம்ஜான், மே 25ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது.
ரம்ஜான் பண்டிகையன்று பள்ளிவாசல்களில் சமூக இடைவெளியை கடைப்பிடித்து இரண்டு மணி நேரம் சிறப்புத் தொழுகை நடத்த அனுமதிக்க தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிடக் கோரி திருவாரூரைச் சேர்ந்த குத்புதீன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் எம்.எம். சுந்தரேஷ், பி.டி. ஆஷா அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, ஊரடங்கு நேரத்தில் அனைத்து மத வழிபாடுகளுக்கும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாகவும், பல்வேறு பண்டிகைகள், திருவிழாக்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதை ஏற்ற நீதிபதிகள், வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.
இதையும் படிங்க: சென்னையில் 12ஆம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணி கிடையாது!