சென்னை: பஞ்சமி நிலத்தில் முரசொலி அறக்கட்டளையின் அலுவலகம் அமைந்திருப்பதாகவும், அந்த இடத்தின் மூல பத்திரத்தை மு.க.ஸ்டாலின் வெளியிட வேண்டும் எனவும் பாமக நிறுவனர் ராமதாஸ் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டிருந்தார். அடிப்படை ஆதாரம் இல்லாமல் குற்றச்சாட்டை முன்வைத்ததாகக் கூறி, பாமக நிறுவனர் ராமதாஸ்-க்கு எதிராக முரசொலி அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலரான ஆர்.எஸ்.பாரதி, எழும்பூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கில் நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு கோரியும், தன் மீதான வழக்கு விசாரணையை ரத்து செய்யக் கோரியும் ராமதாஸ் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கின் விசாரணை நீதிபதி இளந்திரையன் முன்பு நடைபெற்று, தீர்ப்பு தள்ளி வைக்கப்பட்டு இருந்தது.
இந்நிலையில், இந்த வழக்கில் இன்று (டிச.05) தீர்ப்பு அளித்த நீதிபதி, பாமக நிறுவனர் ராமதாஸ்-க்கு எதிராக முரசொலி சார்பாக தொடரப்பட்ட அவதூறு வழக்கை ரத்து செய்து தீர்ப்பளித்தார்.
இதையும் படிங்க: அதிமுக பொதுச் செயலாளர் விவகாரம்; சசிகலா நீக்கத்தை உறுதி செய்து நீதிமன்றம் தீர்ப்பு!