ETV Bharat / state

கறுப்பர் கூட்டம் விவகாரம்: இருவர் மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்த உயர் நீதிமன்றம் - Madras HC cancels goondas act on two men

சென்னை : கறுப்பர் கூட்டம் நாத்திகன், செந்தில்வாசன் ஆகியோர் மீதான குண்டர் சட்டத்தை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.

கறுப்பர் கூட்டம் விவகாரம்
கறுப்பர் கூட்டம் விவகாரம்
author img

By

Published : Feb 5, 2021, 4:01 PM IST

கந்த சஷ்டி கவசத்தை ஆபாசமாக சித்தரித்த குற்றச்சாட்டில் கறுப்பர் கூட்டம் என்ற யூடியூப் சேனலை சேர்ந்த நாத்திகன் என்கிற சுரேந்திரன், செந்தில்வாசன், சோமசுந்தரம், குகன் ஆகியோரை சென்னை காவல்துறையினர் கைது செய்தனர்.

மேலும் கறுப்பர் கூட்டம் இணையதளத்தில் இருந்த 500க்கும் மேற்பட்ட காணொலிப் பதிவுகள் நீக்கப்பட்டதாக சென்னை சைபர் கிரைம் காவல் துறை தெரிவித்தது. இதையடுத்து அந்த யூடியூப் சேனலை சேர்ந்த நாத்திகன், செந்தில்வாசன் ஆகியோரை குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க சென்னை மாநகர காவல் ஆணையர் உத்தரவு பிறப்பித்தார். இந்த உத்தரவை ரத்து செய்யக் கோரி நாத்திகனின் மனைவி கிருத்திகா, செந்தில்வாசன் ஆகியோர் ஆட்கொணர்வு மனுவைத் தாக்கல் செய்திருந்தனர்.

அந்த வழக்குகளின் விசாரணையின்போது, கலாசாரம், நம்பிக்கை என்ற பெயரில் சமூகத்தில் நிலவும் மூட நம்பிக்கைகளை ஒழிப்பதற்காகவும், கல்வியறிவின்மை, அறியாமையை ஒழிக்கவும் பல்வேறு தகவல்களை வெளியிட்டதற்காக குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைத்தது, கருத்து சுதந்திரத்துக்கு எதிரானது எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

காவல்துறையின் தரப்பில் ஒரே ஒரு வழக்கை மட்டுமே பதிவு செய்ததற்காக குண்டர் சட்டத்தில் அடைக்கக்கூடாது என விதிகள் இல்லை என்றும், கறுப்பர் கூட்டத்தினரின் செயல்பாடு குறிப்பிட்ட மதத்தினரிடையே சலசலப்பை ஏற்படுத்தி, கடும் எதிர்ப்பை சந்தித்ததாகத் தெரிவிக்கப்பட்டது.

இந்த வழக்கில் இன்று (பிப். 5) தீர்ப்பளித்த நீதிபதிகள் பி.என். பிரகாஷ், வி. சிவஞானம் ஆகியோர் அடங்கிய அமர்வு, குண்டர் சட்டத்தில் கைது செய்யும் உத்தரவு பிறப்பிப்பதில் காலதாமதம் ஏற்பட்டுள்ள காரணத்தின் அடிப்படையில் இருவர் மீதான குண்டர் சட்டத்தையும் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளனர்.

ஒரே வழக்கிற்காக குண்டர் சட்டம் போடப்பட்டதை எதிர்த்து உள்துறை செயலாளரிடம் அளித்த மனு மீது உரிய காலத்தில் முடிவு எடுக்கவில்லை எனத் தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளனர்.

இதையும் படிங்க... ‘பண்பாட்டின் மீது எல்லை மீறினால் உங்களை முடித்துவிடுவோம்!’ - கறுப்பர் கூட்டத்திற்கு முதலமைச்சர் எச்சரிக்கை

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.