ETV Bharat / state

லயோலா கல்லூரியில் மாணவர்களிடையே மோதல்..! - Loyola college

சென்னை: லயோலா கல்லூரியில் மாணவர் சங்கத் தலைவர் தேர்தலின் போது மாணவர்கள் ஒருவருக்கொருவர் தாக்கிக்கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

லயோலா கல்லூரியில் மாணவர்களிடையே மோதல்
author img

By

Published : Jun 21, 2019, 2:47 PM IST

சென்னை நுங்கம்பாகத்தில் உள்ள லயோலா கல்லூரியில் இன்று மாணவர் தேர்தல் நடைபெற்றது. அப்போது தேர்தலில் தோல்வியடைந்த மாணவர்களுக்கும், வெற்றி பெற்ற மாணவர்களுக்கும் இடையே ஏற்பட்ட தகராறு மோதலாக மாறியதில் ஒருவருக்கொருவர் தாக்கிக் கொண்டனர். இதனால் கல்லூரி வளாகம் முழுவதும் போர்க்களம் போல் காட்சியளித்தது. தகவலறிந்து வந்த காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களை கலைந்து போகச் செய்தனர்.

லயோலா கல்லூரியில் மாணவர்களிடையே மோதல்

இந்தத் தேர்தலில் மூன்றாம் ஆண்டு மாணவர் ஜிஷ்ணு என்பவர் தலைவராகாவும், துணைத் தலைவராக பிலிப்ஸ் என்ற மாணவரும், இணைச்செயலாளராக மணிமாறன் என்பவரும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இதேபோல் சில நாட்களுக்கு முன்பு பேருந்து தினம் என்கின்ற பெயரில் சென்னை புதுக்கல்லூரி, பச்சையப்பன் உள்ளிட்ட கல்லூரியில் பயிலும் மாணவர்கள் பேருந்தின் மேலே ஏறி பயணம் செய்து விழுந்ததும், அதனைத் தொடர்ந்து எம்ஜிஆர் நகர் அரசுப் பள்ளி மாணவர்கள் கட்டிப் புரண்டு சாலையில் சண்டையிட்டதும் என ஒரே வாரத்தில் பல சம்பவங்கள் அரங்கேறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Intro:nullBody:லயோலா கல்லூரியில் மாணவர்களிடையே மோதல்*

சென்னை நுங்கம்பாக்கத்தில் அமைந்துள்ள லயோலா கல்லூரியில் இன்று மூன்றாம் ஆண்டு மாணவர்களுக்கான தேர்தல் நடைபெற்று முடிந்தது . இந்த நிலையில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கும் தோல்வி அடைந்த மாணவர்களுக்கும் இடையே இன்று காலை மோதல் ஏற்பட்டுள்ளது. தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்துவந்து பிரச்சனைக்கு காரணமான மாணவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்தினர்.

இந்த தேர்தலில் மூன்றாம் ஆண்டு ஜிஷ்ணு என்பவர் தலைவராகாவும், துணை தலைவராக பிலிப்ஸ் என்பவரும், மணிமாறன் இணை செயலாளராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

இதே போல் சில தினங்களுக்கு முன்பு பேருந்து தினம் என்கின்ற பெயரில் சென்னை புதுக்கல்லூரி, பச்சையப்பன் உள்ளிட்ட கல்லூரியில் பயிலும் மாணவர்கள் பேருந்து மேலே ஏறி பயணம் செய்ததும். அதனை தொடர்ந்து எம்ஜிஆர் நகர் அரசு பள்ளி மாணவர்கள் கட்டி புரண்டு சாலையில் சண்டையிட்டது என பல சம்பவங்கள் தொடர்ந்து அரங்கேறி வந்த வண்ணமாகவே உள்ளது குறிப்பிடத்தக்கது..Conclusion:null
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.