சென்னை: எழும்பூரில் உள்ள காந்தி இர்வின் பாலம் அருகே நேற்று (அக். 21) மாலை காதல் ஜோடி ஒன்று வாக்குவாதத்தில் ஈடுபட்டு வந்தனர். பின்னர் அப்பாலத்தின் கீழுள்ள ரயில் தண்டவாளத்தில் காதல் ஜோடி சென்று படுத்துக்கொண்டு தற்கொலை செய்துகொள்ள முயன்றதாகக் கூறப்படுகிறது.
இதனைக் கண்ட பொதுமக்கள் சிலர் கூச்சலிட்டு அவர்களை துரத்தினர். இதனால் பதற்றம் அடைந்த காதல் ஜோடி இருவரும் தண்டவாளத்தின் வழியாகவே அங்கிருந்து தப்பியோடி மறைந்தனர். இதையடுத்து அங்கு பொதுமக்கள் கூடியதால் காந்தி இர்வின் பாலத்தில் சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
![chennai news chennai latest news suicide suicide attempt love couple attempting suicide love couple attempting suicide in chennai lovers attempting suicide தற்கொலை முயற்சி காதலர்கள் தற்கொலை முயற்சி ரயில் தண்டவாளத்தில் தற்கொலை முயற்சி தற்கொலை சென்னை செய்திகள்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/13424073_suicide.jpg)
வாக்குவாதத்தில் ஈடுபட்டு தற்கொலைக்கு முயன்றதாகக் கூறப்படும் காதல் ஜோடி யார் என்பது குறித்தும், அவர்களின் பிரச்சினைக்கான காரணம் குறித்தும் எழும்பூர் காவல்துறையினரும், ரயில்வே காவல்துறையினரும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: கோயில் உண்டியலில் கைவரிசை காட்டிய இருவர் கைது