ETV Bharat / state

லாட்டரி கிங் மார்டினின் ரூ.173.48 கோடி மதிப்புள்ள சொத்துகள் முடக்கம்! - Sikkim Lottery

சிக்கிம் லாட்டரிச்சீட்டுகளை விற்பனை செய்ததன் மூலம் முறைகேடுகளில் ஈடுபட்ட லாட்டரி கிங் மார்டினின் ரூ.173.48 கோடி மதிப்பிலான சொத்துகளை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது.

லாட்டரி கிங் மார்டினின் ரூ.173.48 கோடி மதிப்பிலான சொத்துகள் முடக்கம்!

author img

By

Published : Jul 2, 2022, 7:40 PM IST

சென்னை: தமிழ்நாடு உள்பட பல மாநிலங்களில் லாட்டரி விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டிருந்தாலும், கோயம்புத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த லாட்டரி அதிபரான மார்டின், பல மாநிலங்களில் லாட்டரி விற்பனை செய்து வந்தார். முக்கியமாக கேரளாவில் வெளிமாநிலங்களைச் சேர்ந்த லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்யும் உரிமையை பெற்றிருந்தார்.

இதற்கிடையில் சிக்கிம் மாநில லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்தபோது, விதிமுறைகளை மீறி கோடிக்கணக்கில் கேரளாவில் முறைகேடு செய்ததாக கொச்சின் சிபிஐ, மார்டின் மீது வழக்குப்பதிவு செய்தது. இதற்குப் பிறகு நடத்தப்பட்ட சிபிஐ விசாரணையில், கடந்த 2009ஆம் ஆண்டு முதல் 2010ஆம் ஆண்டு வரை சிக்கிம் லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்து பரிசு விழுந்த பொருட்கள் மூலம், மொத்தம் 910 கோடி ரூபாய் இழப்பு ஏற்படுத்தியது தெரியவந்தது.

மேலும் இதில் கிடைத்த வருவாய் மூலமாக 40-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் மற்றும் அசையா சொத்துகளை வாங்கி குவித்ததும் வெளிவந்தது. இதனால் கடந்த 2019ஆம் ஆண்டு இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த அமலாக்கத்துறையினர், மார்டினுக்குச் சொந்தமான 258 கோடி மதிப்புள்ள சொத்துகளை முடக்கினர். தொடர்ந்து கடந்த ஆண்டு மார்டினுக்குச் சொந்தமான 19.59 கோடி மதிப்பிலான சொத்துகளை அமலாக்கத்துறை முடக்கியது.

இந்நிலையில், தற்போது மார்டினுக்குச் சொந்தமான மேலும் 173.48 கோடி ரூபாய் மதிப்பிலான அசையும் மற்றும் அசையா சொத்துகளை அமலாக்கத்துறையினர் முடக்கியுள்ளனர். இதுவரை மார்டினுக்குச் சொந்தமான 450 கோடி மதிப்பிலான சொத்துகள் முடக்கப்பட்டுள்ளதாக அமலாக்கத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த இருவருக்கு தலா 7 ஆண்டுகள் சிறைத்தண்டனை

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.