சென்னை: கிண்டி பாரதி நகரைச்சேர்ந்தவர், குமார்(52). இவர் கிண்டி பகுதியில் லாரிகளில் வரும் சரக்குகளைக் கையாளும் லோடுமேனாக வேலை பார்த்துவந்தார். குமார், தனது லாரி டிரைவர் செந்தில் என்பவருடன் கிண்டி தொழிற்பேட்டைப்பகுதியில் மது அருந்திக்கொண்டு இருந்தார். அப்போது இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
இதில் ஆத்திரமடைந்த லாரி டிரைவர் செந்தில், அங்கிருந்த இரும்புக்கம்பியால் குமார் தலையில் தாக்கினார். இதில் ரத்த வெள்ளத்தில் குமார் மயங்கி விழுந்தார். இதைக்கண்ட செந்தில் அங்கிருந்து தப்பிச்சென்று விட்டார். அப்போது அங்கிருந்தவர்கள் கிண்டி போலீசாருக்குத் தகவல் தந்தனர். கிண்டி போலீசார் 108 ஆம்புலன்ஸுடன் வந்து பார்த்தபோது குமார் இறந்து கிடந்தார். குமார் உடலை ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து கிண்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து, தப்பி ஓடிய செந்தில்குமாரை கைது செய்தனர். குடிபோதையில் ஏற்பட்டத் தகராறில் அடித்துக்கொலை செய்ததாக செந்தில்குமார் ஒப்புக்கொண்டார். இதையடுத்து அவரை சிறையில் அடைக்கும் பணியில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.
இதையும் படிங்க:பேருந்தில் பெண் குழந்தையை விட்டுச்சென்ற பெண் - சிசிடிவி காட்சி உதவியுடன் போலீஸ் விசாரணை