ETV Bharat / state

ஊரடங்கில் புதிய தளர்வுகள் அறிவிப்பு!

author img

By

Published : Jul 2, 2021, 9:28 PM IST

Updated : Jul 2, 2021, 9:44 PM IST

தமிழ்நாட்டில் ஜூலை 12 ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் நலன் கருதி, ஊரடங்கில் புதிய தளர்வுகளை அறிவித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

lock down
lock down

தமிழ்நாட்டில் நடைமுறையில் உள்ள ஊரடங்கு ஜூலை 5 ஆம் தேதி காலை 6 மணியுடன் நிறைவடைகிறது. மக்களின் வாழ்வாதாரம், அத்தியாவசியத் தேவைகளைக் கருத்தில் கொண்டும், தமிழ்நாட்டில் நோய்த்தொற்று பரவல் குறைந்துள்ளதைத் தொடர்ந்து, ஜூலை 5 ஆம் தேதி முதல் அனைத்து மாவட்டங்களிலும் ஒரே வகையான தளர்வுகள் வழங்கப்படுகின்றன.

அதன்படி,

நோய் கட்டுப்பாடு பகுதிகள் தவிர, அனைத்து பகுதிகளிலும், ஏற்கனவே அனுமதிக்கப்பட்டுள்ள செயல்பாடுகள் தொடர்ந்து அனுமதிக்கப்படும்.

மேலும் ஏற்கனவே இரவு 7 மணி வரை செயல்பட அனுமதிக்கப்பட்ட கடைகள் மற்றும் செயல்பாடுகள், இரவு 8 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும்.

ஊரடங்கில் புதிய தளர்வுகள் அறிவிப்பு!
ஊரடங்கில் புதிய தளர்வுகள் அறிவிப்பு!

மேலும் கூடுதலாக கீழ்கண்ட செயல்பாடுகளும் ஒரு சில கட்டுப்பாடுகளுடன் அனுமதிக்கப்படும்.

* அரசு, தனியார் தொழில் சார்ந்த பொருட்காட்சி நிகழ்வுகள் நடத்த அனுமதிக்கப்படும். உரிய அழைப்பிதழ் வைத்திருப்பவர்கள் மட்டும் இதற்கு அனுமதிக்கப்படுவார்கள். இந்த அரங்குகளில் பொருட்காட்சி அமைப்பாளர், விற்பனை கூடங்களின் உரிமையாளர்கள், பணியாளர்கள் கட்டாயம் ஆர்டிபிசிஆர் பரிசோதனை அல்லது இரண்டு தவணைகளில் தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும்.

* உணவகங்கள், விடுதிகல், அடுமணைகள், தங்கும் விடுதிகள், உறைவிடங்களில் உள்ள உணவகங்கள் காலை 6 மணி முதல் மாலை 8 மணி வரை, உரிய காற்றோட்ட வசதியுடன் நிலையான வழிகாட்டு நடைமுறைகளைப் பின்பற்றி, 50 சதவிகித வாடிக்கையாளர்கள் மட்டும் அமர்ந்து உணவு அருந்த அனுமதிக்கப்படும்.

* தேநீர் கடைகளில் நிலையான வழிகாட்டு முறைகளை பின்பற்றி ஒரு நேரத்தில் 50 சதவிகித வாடிக்கையாளர்கள் தேநீர் அருந்த அனுமதிக்கப்படுவர்.

* கேளிக்கை விடுதிகளில் ( Clubs ) உடற்பயிற்சி கூடங்கள், விளையாட்டுக்கள் மற்றும் உணவகங்கள் மட்டும் கரோனா தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றி செயல்பட அனுமதிக்கப்படும்.

* தகவல் தொழில் நுட்பம், தகவல் தொழில் நுட்ப சேவை நிறுவனங்கள் 50 % பணியாளர்களுடன் இயங்க அனுமதிக்கப்படும்.

* தங்கும் விடுதிகள் ; உறைவிடங்கள் ( Holets and lodges ), விருந்தினர் இல்லங்கள் ( Guest Houses ) செயல்பட அனுமதிக்கப்படும் அங்குள்ள உணவு விடுதிகள் மற்றும் தங்குமிடங்களில் ( dormitory ) 50 % வாடிக்கையாளர்கள் மட்டும் அனுமதிக்கப்படுவர்

* அருங்காட்சியகங்கள், தொல்லியல் துறையின் பாதுகாக்கப்பட்ட சின்னங்கள், அகழ் வைப்பகங்கள் காலை 10.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும்.

* உடற்பயிற்சி கூடங்கள் மற்றும் யோகா பயிற்சி நிலையங்கள் உரிய காற்றோட்ட வசதியுடன், ஒரு நேரத்தில் 50 % வாடிக்கையாளர்களுடன் மட்டும் செயல்பட அனுமதிக்கப்படும்.

* டாஸ்மாக் கடைகள் காலை 10.00 மணி முதல் மாலை 8.00 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும்.

* அனைத்து வழிபாட்டுத் தலங்கள் நிலையான வழிகாட்டு நடைமுறைகளை பின்பற்றி செயல்பட அனுமதிக்கப்படும் . திருவிழாக்கள் மற்றும் குடமுழுக்கு நடத்த அனுமதி இல்லை.

* அனைத்துக் துணிக்கடைகள் மற்றும் நகைக்கடைகள், உரிய காற்றோட்ட வசதியுடன், ஒரு நேரத்தில் 50 % வாடிக்கையாளர்களுடன் செயல்பட அனுமதிக்கப்படும்.

* வணிக வளாகங்கள் ( Shopping Complex, Malls ) காலை 9.00 மணி முதல் மாலை 8.00 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும்.

* வணிக வளாகங்களில் உள்ள உணவகங்களில் 50 % இருக்கைகளில் மட்டும் வாடிக்கையாளர்கள் அமர்ந்து உணவு அருந்த அனுமதிக்கப்படும்.

* வணிக வளாகங்களில் உள்ள திரையரங்குகள் மற்றும் விளையாட்டுக் கூடங்களுக்கு அனுமதி இல்லை.

* மாவட்டத்திற்குள்ளேயும், மாவட்டங்களுக்கிடையேயும், பொது பேருந்து போக்குவரத்து , நிலையான வழிகாட்டு நடைமுறைகளைப் பின்பற்றி , குளிர் சாதன வசதி இல்லாமலும், 50 % இருக்கைகளில் பட்டும் பயணிகள் அமர்ந்து பயணிக்க அனுமதிக்கப்படும்.

* SRF/JRF, M.Phil . , Phd . , ஆராய்ச்சி மாணவர்கள் தங்கள் கல்வி சார்ந்த பணிகளை ( Educational Project Works ) தொடர்புடைய கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் மேற்கொள்ள அனுமதிக்கப்படுவர்.

இவர்களின் கல்வி சார்ந்த பணிகளுக்காக கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் செயல்பட அனுமதிக்கப்படும்.

* அண்ணா மேலாண்மை பயிற்சி நிலையம், SIRD போன்ற அரக பயிற்சி நிலையங்கள் மையங்கள் , உரிய காற்றோட்ட வசதியுடன் , 50 % பயிற்சியாளர்கள் மட்டும் பங்கேற்கும் வகையில், செயல்பட அனுமதிக்கப்படும்.

* பொழுதுபோக்கு , கேளிக்கை பூங்காக்கள் ( Entertainment, Amusement Parks ) 50 % வாடிக்கையாளர்களுடன் மட்டும் செயல்பட அனுமதிக்கப்படும் .

முகக் கவசம் அணிதல் , கிருமி நாசனி பயன்படுத்துதல் ஆகியவை நிர்வாகத்தால் முறையாகக் கடைபிடிக்கப்பட வேண்டும்.

இந்த பூங்காக்களில் திறந்த வெளியில் நடத்தப்படும் விளையாட்டுக்கள் மட்டும் அனுமதிக்கப்படும்.

தண்ணீர் தொடர்பான விளையாட்டுகளுக்கு ( water sports) அனுமதி இல்லை.

* மாவட்டங்களுக்கிடையே பயணிக்க இ - பாஸ், இ-பதிவு நடைமுறை ரத்து செய்யப்படுகிறது.

Last Updated : Jul 2, 2021, 9:44 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.