சென்னை: தமிழ்நாட்டில் கடந்த அதிமுக ஆட்சியில் சமூக நலத் துறையின்கீழ் இயங்கிவந்த அங்கன்வாடி மையங்களில் எல்கேஜி, யூகேஜி வகுப்புகள் தொடங்கப்பட்டன. அப்போது அந்தப் பணியிடங்களுக்கு இடைநிலை ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டனர்.
மேலும் நடுநிலை, உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள், மழலையர் பள்ளிகளையும் கவனிக்க வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டது. ஆனால் சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வொன்றில் மழலையர் பள்ளிகள் சரிவர கவனிக்கப்படாமல் இருந்தது ஆய்வில் தெரியவந்தது.
இதனையடுத்து இரண்டாயிரத்து 300-க்கும் மேற்பட்ட எல்கேஜி, யூகேஜி வகுப்புகளுக்கு மாணவர்களைச் சேர்க்க வேண்டாம் என மாவட்ட கல்வித் துறை அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
ஏற்கனவே எல்கேஜி, யூகேஜி வகுப்புகளில் பணியமர்த்தப்பட்ட இடைநிலை ஆசிரியர்களை, மீண்டும் தொடக்கக் கல்வித் துறை ஆசிரியர்களாகப் பணியிட மாறுதல் வழங்க பள்ளிக் கல்வித் துறை முடிவுசெய்துள்ளது.
இதனையடுத்து தற்போது நடைபெற்றுவரும் பொதுமாறுதல் கலந்தாய்வில், இடைநிலை பள்ளி ஆசிரியர்களும் பங்கேற்க அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனால் அங்கன்வாடி மையங்களில் அமைக்கப்பட்டுள்ள எல்கேஜி, யூகேஜி வகுப்புகளை அரசு மூடுமா? என்னும் கேள்வி எழுந்துள்ளது.
இதையும் படிங்க: 'அன்சார்டட்' திரைப்படத்துக்காக 17 முறை காரில் அடிபட்டேன் - டாம் ஹாலந்த்