தமிழ்நாடு அரசு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தவில்லை. விலைவாசி உயர்வு, சொத்துவரி உயர்வு உள்ளிட்டவை குறித்து பேரவையில் பேச அனுமதிக்கவில்லை. தமிழ்நாட்டில் சட்டம் - ஒழுங்கு மிகவும் மோசமாக உள்ளது. 2 லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் திமுக அரசு கடன் வாங்கியுள்ளது என சட்டப்பேரவைக்கு வெளியே எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி பேட்டி
TN Budget 2023: தமிழ்நாடு பட்ஜெட் 2023 -24 முக்கிய அறிவிப்புகள்! - பழனிவேல் தியாகராஜன்
12:24 March 20
பட்ஜெட்டில் திமுக அரசு ஊழியர்களை ஏமாற்றியுள்ளது - ஈபிஎஸ்
11:50 March 20
மகளிர் உரிமைத் தொகைக்கு ரூ.7000 கோடி!
மகளிர் உரிமைத் தொகை ரூ.1000 தகுதி வாய்ந்த குடும்பத் தலைவிக்கு வரும் நிதியாண்டில் வழங்கப்படும். இதற்காக ரூ.7000 கோடி ஒதுக்கீடு - அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்
11:47 March 20
தமிழ்நாடு நெய்தல் மீட்சி இயக்கம்
கடல் அரிப்பைத் தடுக்கவும், கடல் மாசுபாட்டை குறைக்கவும், கடல்சார் உயிரியல் பன்முகத்தன்மையை பாதுகாக்கவும், "தமிழ்நாடு நெய்தல் மீட் இயக்கம்" என்ற திட்டத்தை 2000 கோடி ரூபாய் மதிப்பீட்டில் உலக வங்கி நிதியுதவியுடன் அடுத்த 5 ஆண்டுகளில் தமிழ்நாடு அரசு செயல்படுத்த திட்டம்
11:45 March 20
800 கோடியில் நீர்நிலைகள் புதுப்பிப்பு!
அடுத்த 2 ஆண்டுகளில் 10 ஆயிரம் நீர் நிலைகள், குளங்கள், ஊரணிகள் 800 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதுப்பிக்கப்படும்
11:43 March 20
முதல்வரின் கிராமச் சாலைகள் திட்டத்திற்கு ரூ.2000 கோடி!
முதல்வரின் கிராம சாலை திட்டத்தின் கீழ் வரும் நிதியாண்டில் ரூ.2,000 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 5,145 கிலோ மீட்டர் தூர சாலைகளுக்கான பணிகள் மேற்கொள்ளப்படும்
11:41 March 20
ஈரோட்டில் வனவிலங்கு சரணாலயம்!
அந்தியூர், கோபி வட்டங்களில் உள்ள 80,567 ஹெக்டேர் வனப்பரப்பில் 'தந்தை பெரியார் வனவிலங்கு சரணாலயம்' ஏற்படுத்த திட்டம். இது மாநிலத்தின் 18-வது வனவிலங்கு சரணாலயமாகும்
11:37 March 20
ரூ.2 ஆயிரம் உதவித்தொகைக்கு ரூ.1,444 கோடி!
மாநிலம் முழுவதும் 6.84 லட்சம் மாற்றுத்திறனாளிகள் பயன்பெறும் வகையில் மாதம் 2,000 ரூபாய் உதவித்தொகை வழங்கும் திட்டத்திற்காக ரூ.1,444 கோடி ஒதுக்கீடு - நிதியமைச்சர்
11:26 March 20
அவிநாசி - சத்தி இடையே மெட்ரோ!
அவிநாசி சாலை,சத்தியமங்கலம் சாலையை உள்ளடக்கிய பகுதிகளுக்கு 9 ஆயிரம் கோடி மதிப்பீட்டில் மெட்ரோ ரயில் பாதை அமைக்கப்படும் - நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன்
11:25 March 20
ஆதிதிராவிடர், பழங்குடியினருக்கு 4 விடுதி!
மதுரை, கோவை, திருச்சி, நீலகிரியில் ஆதிதிராவிடர், பழங்குடியின மாணவர்கள் பயன்பெறு வகையில் ரூ.100 கோடி மதிப்பீட்டில் நான்கு நவீன விடுதிகள் கட்டப்படும் - நிதியமைச்சர்
11:08 March 20
உயர்கல்வி, திறன் மேம்பாடு!
54 அரசு பல்தொழில்நுட்பக் கல்லூரிகள் 2,783 கோடி ரூபாய் மதிப்பீட்டில் திறன்மிகு மையங்களாக தரம் உயர்த்தப்படும்
11:06 March 20
உயிர் தியாகம் செய்யும் வீரர்களின் குடும்பத்திற்கு ரூ.40 லட்சம்!
தம் இன்னுயிர் ஈந்து எல்லைகளை பாதுகாக்கும் போர் வீரர்களின் தியாகத்தை போற்றும் வகையில் போர் மற்றும் போரையொத்த நடவடிக்கையின் போது உயிர் தியாகம் செய்யும் தமிழ்நாட்டு வீரர்களின் குடும்பத்திற்கு வழங்கப்பட்டும் நிதியுதவி ரூ.20 லட்சத்தில் இருந்து 40 லட்சமாக உயர்த்தி வழங்கப்படும்
11:01 March 20
அகவை முதிர்ந்த தமிழ் அறிஞர்களுக்கு இலவச பயண அட்டை!
நமது தாய்மொழிக்கு ஆற்றிய அளப்பரிய பங்களிப்பை போற்றும் வகையில் வயது முதிர்ந்த தமிழ் அறிஞர்களுக்கு கட்டணமில்லா பேருந்து பயண அட்டையை அரசு வழங்கி வருகிறது. வரும் ஆண்டில் 591 வயது முதிர்ந்த தமிழர்களுக்கு இச்சலுகையை அரசு வழங்கும் - நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன்
10:56 March 20
புதுப்பெண் திட்டம்: 2.2 லட்சம் மாணவிகள் பயனடைகின்றனர்!
புதுமைப்பெண் திட்டத்தால் மாதந்தோறும் 2.2 லட்சம் மாணவிகள் பயன் அடைகின்றனர். பள்ளிப்படிப்பை முடித்தப்பின் உயர்கல்வியை தொடராத மாணவர்கள் சேர்ந்துள்ளனர் - நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன்
10:51 March 20
பெண்களுக்கு சிறப்பு புத்தொழில் இயக்கம்!
மகளிர் சுய உதவிக்குழுகளுக்கு வரும் நிதியாண்டில் 30 ஆயிரம் கோடி வங்கிக்கடன் வழங்க இலக்கு நிர்ணயம்; பெண்களுக்கான சிறப்பு புத்தொழில் இயக்கம் துவக்கப்படும் - பிடிஆர் பழனிவேல் தியாகராஜன்
10:46 March 20
இலங்கையில் வாழும் தமிழர்களுக்கு இந்திய குடியுரிமை!
இலங்கையில் வாழும் தமிழர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்க வேண்டும் என ஒன்றிய அரசை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம் - பிடிஆர் பழனிவேல் தியாகராஜன்
10:44 March 20
எஸ்சி, எஸ்டி துறைக்கு ரூ.5513 கோடி
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறைக்கு ரூ.5513 கோடி ஒதுக்கீடு
10:42 March 20
மருத்துவத்துறைக்கு ரூ.18,661 கோடி
தமிழ்நாடு மருத்துவத்துறைக்கு ரூ.18,661 கோடி ஒதுக்கீடு செய்யப்படும் - நிதியமைச்சர்
10:41 March 20
அம்பேத்கர் சிந்தனை!
அண்ணல் அம்பேத்கர் சிந்தனைகளை தமிழில் பொழிப்பெயர்த்திட ரூ.5 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு
10:39 March 20
உயர்கல்வித்துறைக்கு ரூ.6,967 கோடி!
உயர்கல்வித்துறைக்கு ரூ.6,967 கோடி ஒதுக்கீடு செய்யப்படும் - நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன்
10:37 March 20
முதலமைச்சர் காலை உணவுத் திட்டத்திற்கு ரூ.500 கோடி!
முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் விரிவாக்கத்திற்கு ரூ.500 கோடி ஒதுக்கீடு; 18 லட்சம் மாணவர்கள் இத்திட்டத்தால் பயன்பெறுவர் - பிடிஆர் பழனிவேல் தியாகராஜன்
10:35 March 20
மொழிப்போர் தியாகிகளுக்கு நினைவிடம்!
மொழிப்போர் தியாகிகளான தாளமுத்து, நடராஜன் ஆகியோருக்கு சென்னையில் நினைவிடம் அமைக்கப்படும்
10:31 March 20
கலைஞர் நூலகம் ஜூன் மாதம் திறப்பு!
மதுரையில் அமைக்கப்பட்டுள்ள கலைஞர் நூலகம் ஜூன் மாதம் திறப்பு - பிடிஆர்
10:30 March 20
அனைத்து பள்ளிகளும் பள்ளி கல்வித்துறையின் கீழ் கொண்டுவரப்படும்!
மாதிரிப்பள்ளிகள், திறன்மிகுப் பள்ளிகள், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை, இந்துசமய அறநிலையத்துறை, வனத்துறை உள்ளிட்ட அனைத்துப் பள்ளிகளும் பள்ளிக்கல்வித்துறையின் கீழ் கொண்டுவரப்படும் - நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன்
10:26 March 20
சென்னையில் உலகளாவிய விளையாட்டு மையம்
சென்னையில் சர்வதேச தரத்தில் விளையாட்டு மையம் அமைக்கப்படும் - பிடிஆர் பழனிவேல் தியாகராஜன்
10:24 March 20
புதிய பள்ளி கட்டிடங்களுக்கு ரூ.7 ஆயிரம் கோடி
ரூ.7 ஆயிரம் கோடி மதிப்பீட்டில் பேராசிரியர் அன்பழகன் பள்ளி மேம்பாட்டு திட்டம் மூலம் புதிய பள்ளி கட்டிடங்கள் கட்டப்படும் - பிடிஆர் பழனிவேல் தியாகராஜன்
10:22 March 20
குடிமைப் பணி தேர்வு மாணவர்களுக்கு ரூ.10 கோடி
IAS, IPS உள்ளிட்ட குடிமைப்பணி தேர்வுகளுக்கு தயாராகும் தேர்ந்தெடுக்கப்பட்ட 1000 மாணவர்களுக்கு முதல்நிலை தயாராக மாதம் ரூ.7,500, முதன்மைத் தேர்வுக்கு ரூ.25,000 உதவித்தொகை வழங்க ரூ.10 கோடி நிதி ஒதுக்கீடு
10:21 March 20
தஞ்சாவூரில் சோழர் அருங்காட்சியகம்!
கடல் பல கடந்து, சமர் பல வென்று உலகாண்ட சோழர்களின் பங்களிப்பை பார் போற்றும் வகையில் பறைசாற்றிட தஞ்சாவூரில் மாபெரும் சோழர் அருங்காட்சியகம் ஒன்று அமைக்கப்படும் - பிடிஆர் பழனிவேல் தியாகராஜன்
10:18 March 20
இலங்கை தமிழர்களுக்காக ரூ.223 கோடி
இலங்கை தமிழர்களுக்கான குடியிருப்புகள் கட்ட ரூ.223 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்
10:15 March 20
வருவாய் பற்றாக்குறை குறைப்பு!
திமுக ஆட்சி பொறுப்பேற்ற போது ரூ.62,000 கோடியாக இருந்த வருவாய் பற்றாக்குறை, தற்போது முப்பதாயிரம் கோடி ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளது - பிடிஆர் பழனிவேல் தியாகராஜன்
10:14 March 20
அதிமுக வெளிநடப்பு!
பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கியதும் சட்டப்பேரவையில் இருந்து அதிமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு
06:51 March 20
தமிழ்நாடு அரசு பட்ஜெட் தாக்கல்
சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள பேரவையின் மண்டபத்தில் 2023 - 2024 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை நிதி மற்றும் மனித வள மேலாண்மை துறை அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்து வருகிறார்.