கரோனா பரவலைத் தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் அனைத்து டாஸ்மாக் கடைகளும் மூடப்பட்டுள்ளன. இதனால் பல்வேறு நபர்கள் மது கிடைக்காத விரக்தியில் தற்கொலை செய்துகொள்வதும், மதுவை கொள்ளையடிப்பதும் தொடர்கதையாகியுள்ளது.
இந்த நிலையில் நேற்று இரவு கோயம்பேட்டில் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தபோது, ரயில் நகரில் உள்ள டாஸ்மாக் கடையின் பூட்டு உடைக்கப்பட்டு வெளியே மதுபான பாட்டில்கள் இருந்ததைக் கண்டு காவல் துறையினர் அதிர்ச்சியடைந்தனர்.
மேலும் சுமார் 40 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான மது பாட்டில்களை அடையாளம் தெரியாத நபர்கள் திருடிச் சென்றதும் தெரியவந்தது. இந்தச் சம்பவம் தொடர்பாக கோயம்பேடு காவல் துறையினர் சிசிடிவி காட்சிகளை வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.