சென்னை: கீழ்ப்பாக்கத்தைச் சேர்ந்தவர் மம்தா. இவரது கணவர் அடிக்கடி மது அருந்திவிட்டு தகராறில் ஈடுபட்டுவந்துள்ளார். இதனால் விரக்தியடைந்த மம்தா, 2015ஆம் ஆண்டு கணவர் வீட்டில் இல்லாத நேரத்தில் தனது இரண்டு குழந்தைகளையும் கழுத்தை நெரித்து கொலைசெய்தார்.
பின்னர் அவரும் தற்கொலைக்கு முயன்றார். இதனைக் கண்ட அக்கம்பக்கத்தினர் மம்தாவை உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று காப்பாற்றினர்.
சிகிச்சைக்குப் பின்பு வீடு திரும்பிய மம்தாவுக்கு எதிராக, கீழ்ப்பாக்கம் காவல் நிலையத்தினர் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கை நேற்று (நவம்பர் 23) சென்னை மாவட்ட கூடுதல் அமர்வு நீதிபதி டி.வி. ஆனந்த் விசாரித்தார்.
அப்போது மம்தா மீதான கொலை குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டுள்ளதால், அவருக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்து நீதிபதி உத்தரவிட்டார். தொடர்ந்து இந்தத் தண்டனையை ஏக காலத்தில் அனுபவிக்கவும் அவர் தீர்ப்பளித்தார்.
இதையும் படிங்க: பாலியல் தொல்லை - பள்ளியில் மாணவி தற்கொலை முயற்சி