சென்னை: துலாம் ராசிக்காரர்களே, உங்கள் வாழ்க்கையில் நல்லிணக்கத்தை மதிப்பீர்கள். இந்த ஆண்டின் தொடக்கத்திலேயே இலக்குகளை அடைய முயற்சி செய்வீர்கள். உங்களின் முயற்சிக்கு பிறகு வாழ்க்கையை இன்னும் அழகாக பார்ப்பீர்கள். வாழ்க்கையில் புத்துணர்ச்சியைப் பெற்று அனைத்திலும் வெற்றியடைவீர்கள். சொந்தங்களை செயல்களாலும் வார்த்தைகளாலும் என் சொந்தங்கள் என்று பெருமிதத்துடன் கூறுவீர்கள். நிறுவனமாக இருந்தாலும் சரி, வேலை செய்பவராக இருந்தாலும் சரி, சுயதொழிலாக இருந்தாலும் சரி, எல்லாவற்றிலும் சிறந்தவராக இருப்பீர்கள்.
குடும்பத்திலும், நற்பெயரைப் பெறுவீர்கள். உடன்பிறந்தவர்களுடன் தகராறு ஏற்படலாம். குடும்பத்திலுள்ள வயதானவர்கள் உங்களிடம் அன்பைக் காட்டலாம். அவர்களின் ஆசீர்வாதத்துடன் வேலையில் வெற்றி காண்பீர்கள். வெளிநாட்டு பயணத்திற்கு தயாராகும் நபர்கள் ஆரம்பத்தில் சில சிரமங்களை சந்திக்க நேரிடலாம். செலவுகள் அதிகரிக்கலாம். இந்த ஆண்டு காதலிப்பவர்களுக்கு கொஞ்சம் கடினமான காலகட்டமாகவே இருக்கும்.
ஆனால் இதை வாழ்க்கையில் ஒரு சவாலாக எடுத்துக்கொண்டு அகிம்சையான வழியில் போராடினால், விரும்பியவரை கரம்பிடிக்கும் வலிமையை அன்பு வழங்கும். குடும்ப வாழ்க்கையில் நல்ல செய்திகள் வரும். பிள்ளைகள் உங்களுக்கு மகிழ்ச்சியைத் தருவார்கள். இந்த ஆண்டு தாய் மாமனுடன் கருத்து வேறுபாடுகளைச் சமாளிக்க வேண்டியிருக்கலாம்.
ரியல் எஸ்டேட் தொழிலில் வெற்றி பெறுவீர்கள். ரியல் எஸ்டேட் வாங்குவதும், விற்பதும் லாபத்தைத் தரும். ஆண்டின் நடுப்பகுதியில், அதிர்ஷ்டம் சாதகமாக இருக்கும். மேலும் ஆண்டின் தொடக்கத்தில் குறிப்பிடத்தக்க நிதி ஆதாயங்களுக்கான வாய்ப்புள்ளது.
இதையும் படிங்க: கன்னி ராசிக்கு புத்தாண்டு பலன் 2024; காதல் உறவுக்காக இனி காத்திருக்க வேண்டாம்!