ETV Bharat / state

என்னைப் பார்த்தா பேய் மாதிரி இருக்கா? - கிரண்பேடி ஆவேசம் - நாராயணசாமியின் கிண்டல் பேச்சு

புதுச்சேரி: முதலமைச்சர் நாராயணசாமி என்னை "பேய்" என்று கூறியதை ஏற்க முடியாது, இது நாகரிகமற்ற செயல் என துணைநிலை ஆளுநர் கிரண்பேடி கடுமையாக விமர்சித்துள்ளார்.

kiranbedi
author img

By

Published : Nov 2, 2019, 11:18 AM IST

புதுச்சேரி மாநிலத்தில் முதலமைச்சர் நாராயணசாமிக்கும் ஆளுநர் கிரண்பேடிக்கும் அவ்வப்போது கருத்து மோதல் இருந்து வருகிறது. சில நேரங்களில் இருவரும் நேரடியாக ஒருவருக்கொருவர் கடுமையாக விமர்சனம் செய்து கொள்வது வழக்கம்.

இந்நிலையில், நேற்று முன்தினம் முன்னாள் பிரதமர் இந்திராகாந்தி நினைவு தினத்தை முன்னிட்டு நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சி சார்பில் அஞ்சலி நிகழ்ச்சி நடைபெற்றது. புதுச்சேரி காங்கிரஸ் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்வில் முதலமைச்சர் நாராயணசாமி கலந்துகொண்டார்.

அப்போது பேசிய அவர், கிரண்பேடி மக்களுக்கு வழங்கும் திட்டங்களை தடுக்கும் 'பேய்' எனக் குறிப்பிட்டு பேசினார். இது அரசியல் வட்டாரத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. தற்போது நாராயணசாமியின் கருத்திற்கு கிரண் பேடி கடும் எதிர்ப்பு தெரிவித்து சமூக வலைத்தளத்தில் தனது கருத்தைப் பதிவிட்டுள்ளார்

அதில், "பேய்கள் யாருக்கும் நல்லது செய்யாது. பேய்கள் மக்களை பயமுறுத்தும். அரசு அதிகாரிகளின் பணியானது மக்களை பாதுகாப்பது. பேய் என்ற வார்த்தை வேண்டாத வார்த்தை. நாகரீகமற்றது, அருவருப்பானது இந்தக் கருத்தை ஏற்க முடியாது" என்று குறிப்பிட்டுள்ளார்.

Intro:முதல்வர் நாராயணசாமி தன்னை பேய் என்று விமர்சித்து உள்ளதற்கு கவர்னர் கிரண்பேடி சமூகவலைதளங்களில் பதிலடி கொடுத்துள்ளார்

Body:முதல்வர் நாராயணசாமி தன்னை பேய் என்று விமர்சித்து உள்ளதற்கு கவர்னர் கிரண்பேடி சமூகவலைதளங்களில் பதிலடி கொடுத்துள்ளார்

புதுச்சேரி காங்கிரஸ் அலுவலகத்தில் நேற்று முன்தினம் நடந்த பிரதமர் இந்திராகாந்தி நினைவு நிகழ்ச்சியில் பேசிய முதல்வர் நாராயணசாமி

புதுச்சேரியில் மக்களுக்கு திட்டங்களை நிறைவேற்ற நினைத்தால் மத்திய பாஜக அரசு நியமித்துள்ள பேய் இலவச அரிசி உள்ளிட்ட அனைத்து மக்கள் நலத் திட்டங்களுக்கும் முட்டுக்கட்டையாக உள்ளது என்றார் இதற்கு கிரண் பேடி கடும் எதிர்ப்பு தெரிவித்து சமூக வலைத்தளத்தில் தனது கருத்தைப் பதிவிட்டுள்ளார்

அதில் புதுச்சேரியில் நிதி தட்டுப்பாடு இருந்தாலும் அரசு அதிகாரிகள் மக்களுக்கு அதிகளவு நன்மைகளை செய்வது அவசியம். மக்கள் நலத்திட்டங்களில் உண்மையான பயனாளிக்கு திட்டம் எந்தவித கசிவும் இல்லாமல் அவர்களிடம் கொண்டு செல்லும் பொறுப்பு உள்ளது

அதை நாம் மக்களிடம் சொல்ல வேண்டாம் நம் பணி மூலம் அவர்களுக்குத் தெரியவரும் அரசின் நிதி இன்றி பல நன்கொடையாளர் களால். ஏரி குளம் உள்ளிட்ட நீர்நிலைகளை தூர்வாரி நிலத்தடி நீர் மேம்பாடு கூட்டு முயற்சியால் நிகழ்ந்துள்ளது நகர்ப்புற வாய்க்காலை தூய்மை படுத்தியதால் அரசுக்கு செலவில்லை.

வெள்ளம் வராமலும் தடுக்கப்பட்டுள்ளது ஏழை மக்கள் பாதிப்பு தடுக்கப்பட்டது

ஆனால் பேய்கள் யாருக்கும் நல்லது செய்யாது அனைத்தும் தனக்கே தேவை என்பதை பேய்களை நினைக்கும் குறிப்பாக மக்களை பேய்கள் பயமுறுத்தும் அரசு அதிகாரிகள் பணியானது மக்களை பாதுகாப்பது பேய் என்ற வார்த்தை வேண்டாத வார்த்தை .நாகரீகம் அற்றது அருவருப்பானது அக்கருத்தை ஏற்க முடியாது என்று இவ்வாறு கவர்னர் சமூக வலைதளங்களில் தனது கருத்தை பதிலடி கொடுத்துள்ளார்Conclusion:முதல்வர் நாராயணசாமி தன்னை பேய் என்று விமர்சித்து உள்ளதற்கு கவர்னர் கிரண்பேடி சமூகவலைதளங்களில் பதிலடி கொடுத்துள்ளார்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.