கரோனா வைரஸ் தொற்றினை தடுப்பதற்காக கோவாக்சின் தடுப்பூசிகள் ஏழு லட்சத்து 82 ஆயிரம், கோவிஷுல்டு தடுப்பூசிகள் 47 லட்சத்து 43 ஆயிரம் என மொத்தம் 54 லட்சத்து 85 ஆயிரம் தடுப்பூசிகள் முன்னதாக மச்சிய அரசால் தமிழ்நாட்டுக்கு அனுப்பப்பட்டது.
கடந்த ஜனவரி 16ஆம் தேதி முதல் ஏப்ரல் 14ஆம் தேதி வரை 41 லட்சத்து 72 ஆயிரம் தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன. மேலும் தடுப்பூசிகளை பொதுமக்களுக்கு அதிக அளவில் செலுத்துவதற்காக தடுப்பூசித் திருவிழாவும் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், ஏப்ரல் 15ஆம் தேதியான இன்று சுமார் இரண்டு லட்சத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
எனவே தமிழ்நாட்டில் தடுப்பூசி பற்றாக்குறை ஏற்படுவதைத் தவிர்ப்பதற்காக, 15 லட்சம் கோவிஷூல்டு தடுப்பூசிகளும், ஐந்து லட்சம் கோவாக்சின் தடுப்பூசிகளும் விரைந்து அனுப்ப வேண்டுமென மத்திய அரசிற்கு மக்கள் நல்வாழ்வு துறை கடிதம் அனுப்பியுள்ளது.