ETV Bharat / state

ஆன்லைன் விளையாட்டால் படிப்பில் ஆர்வம் குறைந்த மாணவன் - சிகிச்சையால் மீண்டான்

ஆன்லைன் விளையாட்டிற்கு அடிமையாகி படிப்பில் ஆர்வம் குறைந்த பள்ளி மாணவன் ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அளிக்கப்பட்ட சிகிச்சையால் மீண்டு வந்துள்ளான்.

ஆன்லைன் விளையாட்டால் படிப்பில் ஆர்வம் குறைந்த மாணவன்

author img

By

Published : May 2, 2022, 10:48 PM IST

சென்னை: ஆன்லைன் விளையாட்டிற்கு அடிமையாகி படிப்பில் ஆர்வம் குறைந்த பள்ளி மாணவன் ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அளிக்கப்பட்ட சிகிச்சையால் மீண்டு வந்துள்ளான்.

ஓமந்தூரார் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் ஜெயந்தி கூறும்போது, “ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில், ‘இணையதள சார்புநிலை மீட்பு மையம்’ 2021ஆம் ஆண்டு துவங்கப்பட்டது. இந்த மையத்தில் சென்னையைச் சேர்ந்த 10ஆம் வகுப்பு படிக்கும் 14 வயது சிறுவன் அனுமதிக்கப்பட்டான். நன்றாக படித்து வந்த மாணவன், ஆன்லைன் வகுப்பின்போது வீட்டில் தனியாக இருந்ததுடன் பொழுதுபோக்காக இணையதளத்தில் விளையாட ஆரம்பித்துள்ளான்.

‘ப்ரீபயர், ரோப்லாக்ஸ்’ போன்ற ஆன்லைன் விளையாட்டுகளை இரவு 3 மணி வரை விழித்திருந்து நண்பர்களுடன் போட்டி போட்டு விளையாடியதால் மற்றவற்றில் ஆர்வம் குறைந்து வீட்டில் மற்றவர்களுடன் பேசுவதை நிறுத்திவிட்டான்.

பெற்றோர் கண்டித்தபோது ஆன்லைன் விளையாட்டாளராகி விடுவதாகவும், அதற்கு படிக்கவோ, தேர்வு எழுதவோ தேவையில்லை எனவும் பதிலளித்துள்ளான். மேலும் பசி குறைந்து உடல் எடை குறைந்து, உணவு சாப்பிடும் ஆர்வமும் இல்லாமல் போனான்.

இணையதள மீட்பு மையத்தில் அனுமதிக்கப்பட்டபோது உடல் மெலிந்து, பார்வை தொடர்பை தவிர்த்து, ஒற்றை எழுத்துகளில் பதிலளித்தான். நான்கு நாட்களுக்கு ஒருமுறை அவனுக்குத் தொடர்ந்து ஆலோசனை வழங்கப்பட்டதுடன் மொபைல் பயன்பாடு கட்டுப்படுத்தப்பட்டது. தற்போது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டு தொடர் சிகிச்சையில் உள்ளான்.

இதேபோல் 15 ஆண் சிறார்கள், 8 பெண் சிறார்கள், 39 ஆண்கள், 5 பெண்கள் என 67 பேர் இணையதள விளையாட்டிற்கு அடிமையாகி சிகிச்சைப் பெற்றுள்ளனர்.

இணைய அடிமையாதல் என்பது இணைய கேமிங் கோளாறு, ஆன்லைன் சூதாட்ட அடிமையாதல், ஆன்லைன் ஆபாச அடிமைத்தனம் ஆகியவற்றை உள்ளடக்கியது. மற்ற போதை பழக்கங்களை போல் இணைய அடிமைத்தனத்திலும் நோய் அறிகுறிகள் ஏற்படலாம். இதிலிருந்து மீள உளவியல் சிகிச்சையும் மருந்துகளும் தேவைப்படுகின்றன. ஓமந்தூரார் மருத்துவமனையில் பாதிப்பு மதிப்பீடு செய்யப்பட்டு அதற்கேற்ப சிகிச்சை அளிக்கப்படுகிறது’ எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: சத்தியமங்கலம் மார்க்கெட் நிலவரம்: மல்லிகைப்பூ கிலோ 800 ரூபாய்க்கு விற்பனை

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.