ETV Bharat / state

தலைமைச் செயலகத்தில் 'லியோ' தரப்பு வழக்கறிஞர்களின் கார் விபத்து.. இருவருக்கு லேசான காயம்.. நடந்தது என்ன?

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 17, 2023, 6:59 PM IST

உள்துறை செயலாளரை சந்தித்துவிட்டு சென்ற "லியோ" படத் தயாரிப்பாளர் தரப்பு வழக்கறிஞர் குழுவினரின் கார் மோதியதில், தலைமைச் செயலக ஊழியர்கள் இருவருக்கு லேசான காயம் ஏற்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

"லியோ" பட தயாரிப்பாளர் தரப்பு வழக்கறிஞர்கள் குழுவினரின் கார் விபத்து..!

சென்னை: நாளை மறுநாள் (அக்.19) 'லியோ' திரைப்படம் வெளியாகயவுள்ளது. இதையடுத்து கூடுதல் காட்சிகள் திரையிட அனுமதிக்க வேண்டும் என 'லியோ' திரைப்பட தயாரிப்பாளர் தரப்பு நீதிமன்றத்தை நாடியது. இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் 7 மணி காட்சி வேண்டும் என்றால் தமிழக அரசிடம் கேட்டு பெற்றுக் கொள்ளவும் என கருத்து தெரிவித்தது.

மேலும், பட தயாரிப்பு நிறுவனத்தின் கோரிக்கையை நாளைக்குள் பரிசீலித்து உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என அரசுக்கு உயர்நீதிமன்றம் ஆணையிட்டது. இதற்காக உள்துறை செயலாளரை நேரில் சந்திக்க 'லியோ' திரைப்பட தயாரிப்பாளர் தரப்பு வழக்கறிஞர் குழுவினர் தலைமைச் செயலகம் சென்றிருந்தனர்.

தலைமைச் செயலகத்தில் உள்துறை செயலாளரை சந்தித்துவிட்டு, 'லியோ' பட தயாரிப்பாளர் தரப்பு வழக்கறிஞர் குழுவினர் தாங்கள் வந்த காரில் திரும்பினர். அப்போது தலைமைச் செயலக வளாகத்தில் உள்ள உடற்பயிற்சி கூடத்தின் பயிற்சியாளர்கள் நிலா மற்றும் சரவணன் இருசக்கர வாகனத்தில் வந்துக் கொண்டு இருந்தனர்.

எதிர்பாராத விதமாக வழக்கறிஞர்கள் குழுவினர் சென்ற கார், இருசக்கர வாகனம் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் இருச்சக்கர வாகனத்தில் சென்ற பயிற்சியாளர்கள் நிலா மற்றும் சரவணன் ஆகியோருக்கு லேசான காயம் ஏற்பட்டது. பின்னர் அவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்து செல்லபட்டனர்.

தலைமைச் செயலக வளாகத்தில் நடைபெற்ற இந்த விபத்தால், அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பான சூழல் நிலவியது. ஏற்கனவே 'லியோ' திரைப்படம் பல்வேறு சர்ச்சைகளை சந்தித்து வரும் நிலையில், சிறப்புக் காட்சிக்கு அனுமதி கேட்டு உள்துறை செயலாளரை சந்திக்க சென்ற வழக்கறிஞர்கள் கார் விபத்தில் சிக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: 'லியோ' அதிகாலை காட்சிக்கு அனுமதி கேட்டு வழக்கு: சென்னை உயர் நீதிமன்றம் சொன்னதென்ன..?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.