ETV Bharat / state

ஈடிவி பாரத் மூத்த செய்தியாளர் லெனின் ரெட்சகநாதன் காலமானார்!

author img

By

Published : Aug 7, 2023, 10:05 PM IST

Updated : Aug 8, 2023, 11:45 AM IST

ஈடிவி பாரத் தமிழ்நாடு இணையதளத்துக்காக, சென்னையில் பணியாற்றி வந்த மூத்த செய்தியாளர் லெனின் ரெட்சகநாதன் மாரடைப்பால் காலமானார்.

Etv Bharat
Etv Bharat

சென்னை: புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கியைச் சொந்த ஊராக கொண்டவர், லெனின் ரெட்சகநாதன் (38). இவர், ஈடிவி பாரத் தமிழ்நாடு ஊடகத்தின், சென்னை பணியக மூத்த செய்தியாளராக பணியாற்றி வந்தார். சுற்றுச்சூழல் குறித்த செய்திகளை மிகுந்த ஆர்வத்துடனும் சமூக அக்கறையுடனும் தாக்கத்தை ஏற்படுத்தும் வகையிலும் பதிவு செய்து கொண்டிருந்தார். மேலும் தலைமைச் செயலக செய்திகளையும் ஆர்வத்துடன் லெனின் பதிவு செய்துவந்தார்.

லெனின், முன்னதாக இந்தியன் எக்ஸ்பிரஸ், டிடி நெக்ஸ்ட், டெக்கான் கிரானிக்கல் ஆகிய ஆங்கில நாளிதழ்களிலும் பணியாற்றியுள்ளார். துடிப்புடன் பணியாற்றி வந்த செய்தியாளர் லெனின், இன்று மாலையில் திடீர் மாரடைப்பால் உயிரிழந்தார். இவரது மறைவுக்கு சென்னை பத்திரிகையாளர் மன்றம் இரங்கல் தெரிவித்துள்ளது.

லெனின் ரெட்சகநாதன் மறைவுக்கு, ஈடிவி பாரத் ஊடகம் மற்றும் ஊழியர்கள் சார்பாக ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறோம்.

  • Anguished to learn about the sad and untimely demise of senior journalist R. Lenin. My condolences to his family and friends. May God give them strength to bear the irreparable loss. Om Shanti!- Governor Ravi#RIP pic.twitter.com/cTC37ohRdo

    — RAJ BHAVAN, TAMIL NADU (@rajbhavan_tn) August 7, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

செய்தியாளர் லெனின் ரெட்சகநாதன் மறைவு தொடர்பாக ஆளுநர் ஆர்.என்.ரவி வெளியிட்டுள்ள இரங்கல் குறிப்பில், ''மூத்த செய்தியாளர் ஆர்.லெனினின் மரணம் குறித்து அறிந்து வேதனை அடைந்தேன். அவரது குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் எனது அனுதாபங்கள். ஈடு செய்ய முடியாத இழப்பை தாங்கும் சக்தியை இறைவன் அவர்களுக்கு வழங்கட்டும். ஓம் சாந்தி!'' எனக்குறிப்பிட்டு, வேதனைத் தெரிவித்துள்ளார்.

Last Updated : Aug 8, 2023, 11:45 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.