ETV Bharat / state

எஸ்.பி.பி.யின் உடல் 78 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் நல்லடக்கம்! - திமுக தலைவர் ஸ்டாலின்

புகழ்பெற்ற பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியத்தின் உடல் 78 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது.

legendary singer SPB funeral held with state govt respect

author img

By

Published : Sep 26, 2020, 3:29 PM IST

Updated : Sep 26, 2020, 5:23 PM IST

1960-களில் தனது இசைப் பயணத்தை தொடங்கிய எஸ்.பி. பாலசுப்பிரமணியம் 16 இந்திய மொழிகளில் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடி இந்திய மக்களின் மனதில் நீங்க இடம் பிடித்தவர். அவர் இன்று நம்முடன் இல்லை. ஆனாலும் அனைவர் மனதிலும் காதுகளிலும் இசையால் பல்லாண்டுகள் வாழ்ந்துகொண்டுதான் இருப்பார்.

இவரது இறுதிச் சடங்கு அரசு மரியாதையுடன் நடைபெறும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார்.

எஸ்.பி. பாலசுப்பிரமணியத்தின் உடல் திருவள்ளூர் மாவட்ட எல்லையில் உள்ள அவரின் பண்ணை வீட்டிலிருந்து 11 கி.மீ. தொலைவில் உள்ள அவரது தோட்டத்தில் இன்று நல்லடக்கம் செய்யப்பட்டது.

பாட்டு நிலாவின் இறுதிப் பயணம்...

அப்போது 78 குண்டுகள் முழங்க அரசு மரியாதை வழங்கப்பட்டது. இது அவரது கோடிக்கணக்கான ரசிகர்களை மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த இந்தியர்களையும் கவுரவப்படுத்தியதாகவே பார்க்கப்படுகிறது. மக்கள் பாடகனுக்கு மகத்தான மரியாதை எனவும் இதனைப் பார்க்கலாம்.

Last Updated : Sep 26, 2020, 5:23 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.