திமுக அமைப்புச் செயலாளரும் மாநிலங்களவை உறுப்பினருமான ஆர்.எஸ். பாரதி. கடந்த 14ஆம் தேதி தேனாம்பேட்டையில் உள்ள அன்பகத்தில் திமுக நிர்வாகிகள் கூட்டத்தில் பேசினார். அப்போது, நீதித்துறையில் தாழ்த்தப்பட்டவர்கள் நீதிபதிகளாகப் பதவியில் இருப்பது திராவிடம் போட்ட பிச்சை என்று பேசினார்.
ஆர்.எஸ். பாரதியின் இப்பேச்சுக்கு பலர் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் ஆர்.எஸ். பாரதி உள்பட சில திமுகவினர் தொடர்ந்து பட்டியலின மக்களை அவதூறாகப் பேசும் செயல் அதிகரித்துவருவதாகவும் அவர்கள் குற்றஞ்சாட்டினார்கள்.
இந்நிலையில், ஆர்.எஸ். பாரதி மீது தாழ்த்தப்பட்டோர் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சென்னை டிஜிபி அலுவலகத்தில் வழக்கறிஞர்கள் சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: திமுக எம்.எல்.ஏ. மரணம்