ETV Bharat / state

மீண்டும் உயிர்பெற்ற துறைமுகம் - மதுரவாயல், சென்னை - பெங்களூரு பசுமைவழி சாலை திட்டம்

தமிழ்நாட்டில் பிரதமர் மோடி நேற்று சுமார் 31,400 கோடி ரூபாய் மதிப்புள்ள 11 திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். அதில் வருடக்கணக்கில் கிடப்பில் போடப்பட்ட துறைமுகம் - மதுரவாயல் பறக்கும் சாலை திட்டம் மற்றும் சென்னை - பெங்களூரு பசுமைவழி சாலை திட்டம் மீண்டும் உயிர் பெற்றுள்ளது.

வருடக்கணக்கில் கிடப்பில் போடப்பட்ட இரண்டு சாலை திட்டங்கள் துவக்கம்

author img

By

Published : May 27, 2022, 9:16 AM IST

சென்னை: சென்னை வந்த பிரதமர் நரேந்திர மோடி சுமார் 31,400 கோடி ரூபாய் மதிப்புள்ள 11 திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். இந்த திட்டங்களில் அதிகமாக பேசப்பட்ட மற்றும் சில காரணமாக 10 ஆண்டுகளுக்கும் மேல் கிடப்பில் போடப்பட்ட இரண்டு சாலை திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டப்பட்டது.

துறைமுகம் - மதுரவாயல் பறக்கும் சாலை திட்டம் : சென்னையின் முக்கிய உள்கட்டமைப்பு திட்டங்களில் ஒன்றான சென்னை துறைமுகம் - மதுரவாயல் நான்கு வழி பறக்கும் சாலை திட்டம் 2007 ஆம் ஆண்டு அப்போதைய தி.மு.க அரசால் முன்மொழியப்பட்டது. இந்த பறக்கும் சாலை திட்டமானது 19 கி.மீ கொண்ட விரைவுச்சாலை ஆகும். மேலும் இந்த உயர்மட்ட விரைவுச் சாலைக்கு முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் 2009 ஆம் ஆண்டு ரூ. 1,468 கோடி செலவில் அடிக்கல் நாட்டினார்.

இந்த சாலைத்திட்டம் 2013 ஆம் ஆண்டிற்குள் முடிக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் அடுத்த வந்த அதிமுக அரசு குறிப்பாக இந்த சாலை கூவம் ஆற்றை ஒட்டி செல்வதால் சுற்றுச்சூழல் பாதிப்புகளை காரணம் காட்டி, இந்த பெரிய திட்டத்தினை கிடப்பில் போட்டது. தொடர்ந்து இந்த திட்டம் மீண்டும் துளிர்க்கும் வகையில் மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சராக நிதின் கட்கரி, தேசிய நெடுஞ்சாலை துறை அலுவலர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, இந்த திட்டத்திற்கான நிழற்படத் திட்ட வரைவினை மாற்றி அமைத்து, ஒப்பந்தம் கோர திட்டமிட்டனர்.

எனினும் ஒப்பந்ததாரர்கள் இந்த திட்டத்தினை எடுக்க சிறிது தயக்கம் காட்டினர். பிறகுதான் இந்த திட்டம் சென்னை துறைமுகம்-மதுரவாயல் இரண்டடுக்கு பறக்கும் சாலைத்திட்டமாக மாற்றியமைக்கப்பட்டது. கடந்த மார்ச் மாதம் இந்த திட்டத்தை புதுப்பிக்க ₹5,885 கோடி செலவில் புரிந்துணர்வு ஒப்பந்தம் நான்கு பங்குதாரர்களிடையே கையெழுத்தானது. இதன்படி 21 கிலோமீட்டர் நீளமுள்ள இந்த நான்கு வழி சாலை நேரடியாக சென்னையின் எல்லையை துறைமுகத்தோடு இணைப்பதோடு, இரண்டு மணி நேர பயணத்தை 15 நிமிடங்களாக குறைக்கும் என கணக்கிடப்பட்டுள்ளது.

சென்னை - பெங்களூரு பசுமைவழி சாலை : இந்த சென்னை - பெங்களூரு அதிவிரைவு சாலை 2011 இல் முன்மொழியப்பட்ட நான்கு வழி விரைவுச் சாலை திட்டமாகும். இந்த திட்டமானது தமிழ்நாடு, ஆந்திரப் பிரதேசம் மற்றும் கர்நாடகா ஆகிய மூன்று மாநிலங்கள் வழியாக செல்வதால் நிலம் கையகப்படுத்துவதில் சுமார் 10 ஆண்டுகள் தாமதம் ஏற்பட்ட நிலையில் பிரதமர் மோடி இந்த முக்கியமான திட்டத்துக்கு நேற்று அடிக்கல் நாட்டியுள்ளார்.

தற்போதுள்ள வழித்தடத்தில் நாள்தோறும் சுமார் 15,000 ஆயிரம் வாகனங்கள் பயணிப்பதோடு சரக்கு வாகனங்களும் பயணிப்பதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. 262 கிமீ நீளமுள்ள பெங்களூரு-சென்னை விரைவுச் சாலை ₹14,870 கோடி செலவில் கட்டப்படும். இந்த திட்டத்தின் மூலம் சென்னை-பெங்களூரு பயண நேரம் 2 லிருந்து 3 மணி நேரம் குறையும். தற்போது சென்னையிலிருந்து பெங்களூருவை சென்றடைய 6 மணி நேரம் முதல் 7 மணி வரை நேரம் எடுக்கிறது.

இந்த அதிவேக சாலையானது மூன்று மாநிலங்களின் வழியே சென்று பெங்களூருவை அடைகிறது. அதாவது கர்நாடகாவின் வழியே 71 கி.மீட்டரும், ஆந்திரப் பிரதேசம் வழியே 85 கி.மீட்டரும் மற்றும் தமிழ்நாட்டின் வழியே 106 கி.மீட்டரும் ஆகிய மூன்று மாநிலங்களைக் கடந்து பெங்களூருக்கும் சென்னைக்கும் இடையிலான பயண நேரத்தைக் குறைக்க உதவும். 'பாரத்மாலா பரியோஜனா' திட்டத்தின் ஒரு பகுதியாக இந்த அதிவேக நெடுஞ்சாலை உருவாக்கப்படுகிறது என நெடுஞ்சாலை அதிகாரிகள் கூறினர்.

இந்த விரைவுச் சாலையைப் பயன்படுத்துவோர் டோல் கட்டணம் செலுத்த வேண்டும். இருப்பினும், வாகன ஓட்டிகள் பாதசாரிகள், கால்நடைகள் அல்லது சந்திப்புகளைப் பற்றி கவலைப்படாமல் அவர்கள் ஒரு சுமூகமான மற்றும் பாதுகாப்பான பயணத்தை மேற்கொள்ளும் வகையில் இந்த சாலை அமையவுள்ளது. இந்த நெடுஞ்சாலையில், மணிக்கு 120 கிமீ வேகத்தில் வாகனம் ஓட்ட முடியும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதையும் படிங்க: மதுரை - தேனி ரயில் போக்குவரத்து: வியப்பிற்குரிய வரலாற்றுத் தகவல்கள்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.