ETV Bharat / state

தொழிலதிபர் ரீட்டா உயிரைப் பறித்த பொருளாதார மந்தநிலை: அதிர்ச்சியூட்டும் பின்னணி! - lanson toyata

சென்னை: பொருளாதார மந்தநிலை காரணமாகவே லான்சன் டொயோட்டா நிறுவனத்தின் இணை இயக்குநர் ரீட்டா தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டிருப்பதாக அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

business
author img

By

Published : Sep 13, 2019, 2:01 PM IST

டொயோட்டா நிறுவனத்தின் தமிழ்நாடு டீலரான லான்சன் டொயோட்டா நிறுவனத்தை 2000ஆம் ஆண்டு லங்காலிங்கம் என்பவர் நிறுவினார். கோயம்பேட்டிலிருந்து தொடங்கிய இந்த நிறுவனத்தின் முதல் கிளை மாநிலம் முழுவதும் விறுவிறுவென பரவியது. 60 ஆயிரம் வாடிக்கையாளர்களைக் கொண்ட பிரமாண்ட தொழில் நிறுவனமாக லான்சன் உருவெடுத்திருந்தது.

இந்த நிறுவனத்தின் இணை இயக்குநராக லங்காலிங்கத்தின் மனைவி ரீட்டா லங்காலிங்கம் இருந்துவந்தார். இவர்களுக்கு லாவண்யா என்ற பெண்ணும் லிவாஸ் என்ற மகனும் உள்ளனர். இதில் லாவண்யா சுவிட்சர்லாந்தில் வசிக்கும் நிலையில், லிவாஸ் திருமணமாகி குடும்பத்துடன் சென்னை ஈ.சி.ஆர். சாலையில் குடியிருந்துகொண்டு தொழிலை கவனித்துவருகிறார்.

தற்கொலை செய்துகொண்ட ரீட்டா லங்காலிங்கம்
தற்கொலை செய்துகொண்ட ரீட்டா லங்காலிங்கம்

இந்த நிலையில், நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார மந்தநிலை இவர்களின் குடும்பத்தையும் விட்டுவைக்கவில்லை. குறிப்பாக, ஆட்டோமொபைல் நிறுவனங்களில் ஏற்பட்டுள்ள கடும் பொருளாதார நலிவு, இவர்களின் தொழிலையும் ஆட்டி படைத்ததாகக் கூறப்படுகிறது.

இந்தச் சூழலில், இரு தினங்களுக்கு முன்னர் தமிழ்நாட்டின் அனைத்து கிளை மேலாளர்களுடன் ரீட்டா லங்காலிங்கம் சென்னையில் சந்திப்பு ஒன்றை ஏற்படுத்தியதாகவும், அப்போது மேலாளர்களை இவர் கடுமையாகத் திட்டியதாகவும், அதனால் கணவன்-மனைவி இடையே பிரச்னை ஏற்பட்டதாகவும் தெரிகிறது.

இதனிடையே, சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தனது வீட்டின் அறையில் ரீட்டா லங்காலிங்கம் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டுள்ளார். இது குறித்து அவரது பணியாளர் கொடுத்த தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர், ரீட்டாவின் உடலைக் கைப்பற்றி கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்துவிட்டு விசாரணையை தொடங்கியுள்ளனர்.

நுங்கம்பாக்கத்தில் ரீட்டா வீடு அமைந்துள்ள பகுதி

‘காபி டே’ சித்தார்த்தா, ரீட்டா என பொருளாதார நெருக்கடிகளில் சிக்கித் தவிக்கும் பெரு நிறுவன முதலாளிகளின் அடுத்தடுத்த தற்கொலைகள் புதிய இந்தியா மக்களுக்கு என்ன சொல்லவருகிறது என்ற பெரும் கேள்வி பொதுத்தளங்களில் தொடர்ந்து எழுந்துகொண்டே இருக்கிறது.

Intro:Body:பொருளாதார மந்தநிலை நசிவு காரணமாக லான்சன் டயோடோ நிறுவனத்தின் இணை இயக்குனர் ரீட்டா தூக்கிட்டு தற்கொலை.

டொயோட்டா நிறுவனத்தின் தமிழகத்தின் டீலரான லான்சன் டொயோட்டா நிறுவனத்தின் இயக்குனராக இருந்து வருபவர் தொழிலதிபர் லங்கலிங்கம். இவரது மனைவி ரீட்டா லங்காலிங்கம் இதே நிறுவனத்தில் இணை இயக்குனராக இருந்து வருகிறார். இவர்களுக்கு லாவண்யா என்ற பெண்ணும் லிவாஸ் என்ற மகனும் உள்ளனர்.

இதில் லாவண்யா என்பவர் சுவிட்சர்லாந்தில் வசித்து வருகிறார். மகன் லிவாஸ் திருமணமாகி குடும்பத்துடன் சென்னையில் உள்ள ஈ.சி.ஆர் ரோட்டில் தொழிலை கவனித்து வருகிறார்.

கடந்த 2000ஆம் ஆண்டு டொயொட்டா கார்களை விற்பனை செய்யும் டீலர் நிறுவனமான லான்சன் நிறுவனத்தை கோயம்பேட்டில் முதன்முதலாக லங்கா லிங்கம் நிறுவினார்.இதற்கு இணை இயக்குனராக ரீட்டா லங்காலிங்கம் இருந்து வந்துள்ளார். பின்னர் 2016ஆம் ஆண்டு 60,000 வாடிக்கையாளர்களை கொண்ட நிறுவனமாக உருவெடுத்து இருந்தது.

இந்நிலையில் இந்தியாவில் ஆட்டோமொபைல் துறைகளை ஆட்டிப்படைக்கும் பொருளாதார நலிவு இவர்களது நிறுவனத்தையும் விட்டுவைக்கவில்லை. பொருளாதார நிலையின் காரணமாக இவர்களது நிறுவனத்தில் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

சென்னையில் இரு தினங்களுக்கு முன்பாக தமிழகத்திலுள்ள அனைத்து கிளை லான்சன் டொயோட்டோ நிறுவனத்தின் மேலாளர்களுடன் ரீட்டா லங்காலிங்கம் தொழில் நலிவு குறித்து சந்திப்பு ஒன்றை ஏற்படுத்தியதாகவும், அந்த சந்திப்பில் மேலாளர்களை கடுமையாக இவர் திட்டியதாகவும் அந்த காரணத்தினால் கணவன்-மனைவிக்குள் இடையே பிரச்சினை ஏற்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் தொழில் பிரச்சினையானது வீட்டுப் பிரச்சனையாக மாற ஆரம்பித்து உள்ளது. இந்த காரணத்தால் தொழிலதிபர் ரீட்டா லங்காலிங்கம் நேற்று இரவு சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தனது வீட்டின் அறையில் சென்று ஜன்னல் திரை சேலையில் மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இன்று காலை ரீட்டாவின் வீட்டுக்கு சென்ற சூப்பர்வைசர் ஏசுபாதம் என்பவர் ரீட்டா தற்கொலை செய்துகொண்ட விஷயத்தை நுங்கம்பாக்கம் காவல் நிலையத்திற்கு தெரிவித்துள்ளார். சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து உடற்கூறு ஆய்வுக்காக ரீட்டாவின் உடலை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.