இந்நிலையில், காவல் உதவி ஆய்வாளர் சஸ்பெண்ட் நடவடிக்கைக்கு எதிராக ஒரு பெண் காவலர் பேசிய ஆடியோ வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அந்த ஆடியோவில் நீதிபதி குறித்தும் காவலர்களின் பண பலன்கள், பணி நெருக்கடி உள்ளிட்டவைகளை தகாத வார்த்தைகளை பயன்படுத்தி கடுமையாக பேசியிருந்தார். இதுதொடர்பாக காவல்துறையினர் விசாரிக்கையில் அந்த ஆடியோவில் பேசியது சென்னை அசோக் நகர் காவல் நிலைய பெண் தலைமைக் காவலர் பெர்சியல் என்பது தெரியவந்தது. இவரை சென்னை காவல் ஆணையர் அதிரடியாக பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார்.
சமூகத்தில் நடக்கும் தவறுகளை தட்டிக் கேட்பதுதான் காவலர்களின் முதன்மையான பணி. ஆனால், தங்களுடைய சக ஊழியர்க்கு எதிராக எடுக்கப்பட்ட நடவடிக்கையை விமர்சித்து பேசியதற்கு பெண் காவலர் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட சம்பவம் காவல்துறை வட்டாரத்தில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.