சென்னை போரூரில் உள்ள தனியார் பெண்கள் விடுதியில் தங்கி, கடந்த 2016ஆம் ஆண்டு முதல் மடிப்பாக்கத்திலுள்ள கடையில் பூங்காவனம் (26) வேலைப் பார்த்து வந்துள்ளார்.
அதே கடையில் பணிபுரியும் கௌதம்(27) என்ற நபருடன் பழக்கம் ஏற்பட்டு, நாளடைவில் காதலாக மாறியது. பின்னர், பல முறை இல்லற வாழ்க்கையிலும் ஈடுபட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
பின்னர், கௌதமிடம் திருமணம் பற்றி கேட்டால், வீட்டில் எல்லோரிடமும் கூடிய விரைவில் பேசி திருமணம் செய்துகொள்வதாக காலம் தாழ்த்தி வந்துள்ளார். இந்த நிலையில் 2017ஆம் ஆண்டு கௌதமிற்கு பதவி உயர்வு பெற்று, வேறு கடைக்குச் சென்றுவிட்டார். மேலும், கவுதம் பூங்காவனத்தை புறக்கணிக்க ஆரம்பித்தார்.
இந்நிலையில் கெளதம் தன்னை ஏமாற்றிவிட்டதாக, பூங்காவனம் கிண்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்தப் புகாரில் எந்தவித ஆவணமும் இல்லை என காவல் ஆய்வாளர் நடவடிக்கை எடுக்கவில்லை. இதைச் சாதகமாக பயன்படுத்திக்கொண்ட கெளதம், வேறொரு பெண்ணை திருமணம் செய்ய நிச்சயித்து உள்ளதாகத் தெரிவித்தார்.
இதனால் தன்னை திருமணம் செய்து கொள்வதாக ஏமாற்றிய கவுதம் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கக்கோரி, பூங்காவனம் காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.
இதையும் படிங்க: