சென்னை: நாகப்பட்டினம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து கடலுக்குச் சென்ற மீனவர்கள் 23 பேரை, இலங்கைக் கடற்படையினர் படகுகளுடன் சிறைப்பிடித்துச் சென்றனர். அவர்களை விடுவிக்க ஒன்றிய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என நாகப்பட்டினம், மயிலாடுதுறை, காரைக்கால் மாவட்ட மீனவர்கள் கோரிக்கைவிடுத்தனர்.
இந்நிலையில் இலங்கைக் கடற்படையினரால் சிறைப்பிடிக்கப்பட்ட மீனவர்களை விடுவிக்கக் கோரி வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு ஒன்றிய இணையமைச்சர் எல். முருகன் கடிதம் எழுதியுள்ளார்.
அதில் தமிழ்நாடு மீனவர்களை, அவர்களது படகுகளுடன் பத்திரமாக விடுவிக்கப்பட உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டுள்ளார்.
இதையும் படிங்க: கரோனா தடுப்பூசி செலுத்துவதில் 70% விரைவில் பெறுவோம் - அமைச்சர் மா.சுப்பிரமணியன்