ETV Bharat / state

கரோனா தடுப்புப் பணியில் உயிரிழந்தோர் குடும்பத்திற்கு ரூ.1 கோடி வழங்க வேண்டும்: எல்.முருகன் - கரோனா தடுப்பு பணியில் உயிரிழந்தோர் குடும்பத்திற்கு ரூ.1 கோடி வழங்க வேண்டும்

சென்னை: கரோனா தடுப்புப் பணியில் உயிரிழந்தோர் குடும்பத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ரூ.1 கோடி வழங்க வேண்டும் என தமிழ்நாடு பாஜக தலைவர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.

எல்.முருகன் அறிக்கை
எல்.முருகன் அறிக்கை
author img

By

Published : May 12, 2021, 7:26 PM IST

இதுகுறித்து தமிழ்நாடு பாஜக தலைவர் எல்.முருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், "கரோனா தடுப்புப் பணியில் ஈடுபட்டு உயிரிழந்தோர் குடும்பத்திற்கு ரூபாய் 25 லட்சம் அறிவித்திருக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். கடந்த ஆட்சியிலும் கூட, இதே 25 லட்சம் ரூபாய் தான் இழப்பீடாக கொடுக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது ஏதோ அதிகப்படுத்தியிருப்பது போன்ற ஒரு தோற்றத்தை ஏற்படுத்தியிருப்பது ஏமாற்றம் அளிப்பதோடு, அதிர்ச்சியையும் அளிக்கிறது.

கடந்த வருடம் எப்ரல் 15ஆம் தேதி அன்று திமுக உள்ளிட்ட 11 கட்சி கூட்டணியினர் கரோனா தடுப்புப் பணியில் ஈடுபட்டுள்ள பணியாளர்களுக்கு சிறப்பு ஊதியம், ஊதிய உயர்வுகள் வழங்க வேண்டும். உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு தமிழ்நாடு அரசு 1 கோடி ரூபாய் நிவாரணம் வழங்க வேண்டும் என்ற தீர்மானத்தை நிறைவேற்றியிருந்தது குறிப்பிடத்தக்கது.

எல்.முருகன் அறிக்கை
எல்.முருகன் அறிக்கை

கடந்த வருடம் ஆகஸ்ட் 6ஆம் தேதியன்று அதிமுக அரசு முன்களப்பணியாளர்களின் குடும்பங்களுக்கு ரூபாய் 25 லட்சம் இழப்பீடாக கொடுக்கப்படும் என்ற அறிவிப்பை செய்த போது, கடுமையாக எதிர்த்த திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், ஏப்ரல் 2020ல் அறிவித்திருந்தபடி ரூபாய் 50 லட்சத்திலிருந்து ரூபாய் 25 லட்சமாக குறைத்ததை கடுமையாக ஆட்சேபித்த ஸ்டாலின், 50 லட்சம் ரூபாய் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையையும் பதிவு செய்தது குறிப்பிடத்தக்கது.

எல்.முருகன் அறிக்கை
எல்.முருகன் அறிக்கை

எதிர்க்கட்சியாக இருக்கும் போது ஒன்றைப் பேசி விட்டு, ஆளுங்கட்சியாக இருக்கும்போது மாற்றி பேசுவது அழகல்ல. ஆகவே, உடனடியாக முதலமைச்சர் தன் வாக்குப்படி, உயிரிழந்த பணியாளர் குடும்பங்களுக்கு ரூபாய் 1 கோடியும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் வழங்கி உத்தரவிடுமாறு கேட்டுக் கொள்கிறேன்" எனத் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: 'திமுக ஆட்சி அமைந்த 3 மாதங்களில் மக்கள் கோரிக்கைகளுக்கு தீர்வு’ - மகேஷ் எம்எல்ஏ

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.