ETV Bharat / state

'ரஜினிகாந்த் கட்சித் தொடங்கினாலும், பாஜகவில் இணைந்தாலும் எந்தப் பயனும் இல்லை!' - வசந்தகுமார் குறித்து அழகிரி

சென்னை: நடிகர் ரஜினிகாந்த் கட்சித் தொடங்கினாலும் அல்லது பாஜகவில் இணைந்தாலும் தமிழ்நாட்டிற்கு எந்தவொரு பயனும் ஏற்படப்போவதில்லை என தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி தெரிவித்துள்ளார்.

ks-alagiri-replies-to-bjp-pon-dot-radhakrishnan-comment-on-rajini-politics
author img

By

Published : Oct 22, 2019, 6:17 PM IST

சென்னை விமான நிலையத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி செய்தியாளர்களிடம் பேசுகையில், "நாங்குநேரியில் மக்களவை உறுப்பினர் வசந்தகுமார் அத்துமீறி நுழையவில்லை. தேர்தலில் நெருக்கடி ஏற்படும்பொழுது அரசு இதுபோன்ற தவறான செயல்களில் ஈடுபடுகிறது. மக்களவை உறுப்பினரும் ஒரு கட்சியின் தலைவரும் எந்த ஒரு தவறான செயல்களிலும் ஈடுபட மாட்டார்கள். அரசு தனது தவறை திருத்திக் கொள்ள வேண்டும்.

ஆளும் கட்சியைப் பொறுத்தவரை தேர்தலில் தனது அதிகார பலத்தையும் பணபலத்தையும் அதிக அளவில் செலவழித்தனர். அவர்களிடம் பணமும் அதிகாரமும்தான் இருந்ததே ஒழிய மக்களுடைய ஆதரவும் விருப்பமும் எங்கள் பக்கம் இருந்ததால் அவர்களால் ஒன்றும் செய்ய முடியவில்லை ஏராளமான மக்கள் எங்களுக்கு வாக்களித்துள்ளனர்" எனத் தெரிவித்தார்.

தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி செய்தியாளர் சந்திப்பு

ரஜினிகாந்த் கட்சி ஆரம்பிப்பதாக இருந்தால் அவர் பாஜகவில் இணைய வேண்டும் என பொன். ராதாகிருஷ்ணன் விருப்பம் தெரிவித்தது குறித்த கேள்விக்கு, பொன். ராதாகிருஷ்ணன் கருத்துக்கு தான் தடையாக இல்லை என்றும் ரஜினிகாந்த் கட்சி ஆரம்பித்தாலோ அல்லது பாஜகவில் இணைந்தாலோ தமிழ்நாட்டிற்கு எந்த ஒரு நன்மையும் கிடைக்காது எனவும் பதிலளித்தார். மேலும், ஆன்மிகத்தில் நாட்டம் உள்ளவர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் என்றார்.

இதையும் படிக்கலாமே: இமயமலையிலிருந்து திரும்பிய ரஜினி... கேள்விகளுக்கு பதிலளிக்காமல் புறப்பட்டார்

Intro:தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே எஸ் அழகிரி சென்னை விமான நிலையத்தில் பேட்டி

Body:தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே எஸ் அழகிரி சென்னை விமான நிலையத்தில் பேட்டி

நாங்குநேரியில் வசந்தகுமார் எம்பி அத்துமீறி நுழையவில்லை அரசாங்கத்திற்கு தேர்தலில் நெருக்கடி ஏற்படும் பொழுது இது போன்ற தவறான செயல்களில் ஈடுபடுகின்றனர்

நாடாளுமன்ற உறுப்பினரும் ஒரு கட்சியின் தலைவரோ எந்த ஒரு தவறான செயல்களிலும் ஈடுபட மாட்டார்கள் அரசாங்கம் தனது தவறை திருத்திக் கொள்ள வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கிறேன்

ஆளும் கட்சியை பொறுத்தவரை தேர்தலில் தனது அதிகார பலத்தையும் பணபலத்தையும் அதிக அளவில் செலவழித்தனர் வழக்கமாக அவர்கள் செய்கின்ற பழக்கத்தைதான் அவர்கள் செய்தார்கள்

அவர்களிடம் பணமும் அதிகாரமும் தான் இருந்ததே ஒழிய மக்களுடைய ஆதரவும் விருப்பமும் எங்கள் பக்கம் இருந்ததால் அவர்களால் ஒன்றும் செய்ய முடியவில்லை ஏராளமான மக்கள் எங்களுக்கு வாக்களித்துள்ளனர்

தேர்தலைப் புறக்கணித்த வர்களிடம் எடுத்துக்கூறி வாக்கு செலுத்த வைத்தும் அதில் சில பேர் வாக்கு செலுத்தவில்லை அது அவர்களுடைய விருப்பம்

ரஜினிகாந்த் அவர்கள் கட்சி ஆரம்பித்தால் பாஜகவில் இணைய வேண்டும் என்ற பொன் ராதாகிருஷ்ணன் கருத்து

பொன் ராதாகிருஷ்ணன் கருத்துக்கு நான் தடையாக இல்லை ரஜினிகாந்த் அவர்கள் கட்சி ஆரம்பித்தாலோ அவர் பாஜகவில் இணைவதாலோ தமிழகத்திற்கு எந்த ஒரு நன்மையும் கிடைக்காது ரஜினிகாந்த் அறிவுபூர்வமானவர் அவர் இதுபோன்ற தவறுகளை செய்ய மாட்டார் அவர் பாஜகவில் இணைய மாட்டார் பின்னர் பேசிய அவர் ஆன்மிகத்தில் நாட்டம் உள்ளவர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் எனத் தெரிவித்தார்

சென்னை விமானத்தில் செய்தியாளர்களை சந்தித்த பின் அவரின் பிறந்தநாளை ஒட்டி அவர் கட்சி தொண்டர்களுக்கு இனிப்பு வழங்கினார்

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.