ETV Bharat / state

'திமுகவின் சிகரமாகயிருந்தவர் மறைந்துவிட்டார்' - கே.எஸ். அழகிரி - தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி

சென்னை: திமுக முதுபெரும் தலைவர் பேராசிரியர் க. அன்பழகனின் மறைவிற்கு தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித் தலைவர் கே.எஸ். அழகிரி இரங்கல் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

ks-aalagiri-tncks-aalagiri-tnccc
ks-aalagiri-tncc
author img

By

Published : Mar 7, 2020, 12:18 PM IST

இதுகுறித்து அவர் வெளியிட்டிருந்த அறிக்கையில்:

பெரியார், அண்ணா, கருணாநிதி ஆகியோர் தலைமையை ஏற்று, 70 ஆண்டுகளுக்கும் மேலாக திராவிட இயக்க கொள்கைகளை தமது உயிரினும் மேலாகக் கருதி, வாழ்நாள் முழுவதும் அதை நிறைவேற்றுவதற்கு கடுமையாக உழைத்த கொள்கைவாதி பேராசிரியர் க. அன்பழகன் தமது 97ஆவது வயதில் காலமான செய்தி கேட்டு மிகுந்த துயரமும், வருத்தமும் அடைந்தேன்.

அவர், திராவிட முன்னேற்றக் கழகத்தில் 43 ஆண்டுகள் பொதுச்செயலாளராகவும், ஒன்பது முறை சட்டப்பேரவை உறுப்பினராகவும், ஒருமுறை நாடாளுமன்ற உறுப்பினராகவும், திமுக அமைச்சரவையில் மக்கள் நல்வாழ்வு, நிதி, கல்வி போன்ற துறைகளை ஏற்று மிகச்சிறப்பாகப் பணியாற்றியர்.

சிறுவயது முதல் பெரியார், திருவிக போன்றவர்களின் எழுத்துகளாலும், கொள்கைகளாலும் ஈர்க்கப்பட்டவர். தமது கருத்து வளம், நாவன்மை மூலம் அற்புதமாகச் சொற்பொழிவு ஆற்றக்கூடியவர். எவரிடமும் அன்பு காட்டி, இனிமையாகப் பழகக் கூடியவர்.

அவரும், கருணநிதியும் நட்புக்கு இலக்கணமாகத் திகழ்ந்தவர்கள். இருவருக்கும் சரியான புரிதலோடு திராவிட முன்னேற்றக் கழகத்தை மிகச் சிறப்பாக நடத்திய பெருமை உண்டு. சோதனையான காலத்தில் இருவரும் இணைந்து பணியாற்றியதை எவரும் மறக்க முடியாது.

திராவிடர் கழகத்திலிருந்த எனது தந்தை மீது அளவற்ற அன்பு கொண்டிருந்த காரணத்தால், என்னிடமும் மிகுந்த பாசத்தோடும், பரிவோடும் பழகியவர். அவரின் மறைவு எனக்கு தனிப்பட்ட முறையில் மிகப்பெரிய இழப்பாகும்.

ks-aalagiri
கே.எஸ். அழகிரி இரங்கல் அறிக்கை

திமுகவின் தூண் சாய்ந்துவிட்டது. திமுகவின் சிகரமாகயிருந்த அவர் மறைந்துவிட்டார். அவரது மறைவு தமிழ் மக்களுக்கு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும். திமு கழகத்தின் முதுபெரும் தலைவர் பேராசிரியரின் மறைவிற்கு தமிழ்நாடு காங்கிரஸ் சார்பாகவும், தனிப்பட்ட முறையிலும் எனது ஆழ்ந்த இரங்கலை அவரது குடும்பத்தினருக்கும், திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் உள்ளிட்ட அவரது கட்சியினருக்கும் தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: 'பேராசிரியரின் பேரும் புகழும் எந்நாளும் நிலைத்திருக்கும்' - வைகோ புகழாரம்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.