ETV Bharat / state

'சொந்தக் கடைகள் இருந்தும் அகதிகள் போல் ஆனோம்': கோயம்பேடு வியாபாரிகள் வேதனை

சென்னை: சொந்த கடைகள் வைத்திருந்தும் அகதிகள் போல அங்குமிங்கும் அலைந்து கொண்டு இருக்கிறோம் என கோயம்பேடு அனைத்து வியாபாரிகள் சங்கத்தின் பிரதிநிதிகள் வேதனைத் தெரிவித்தனர்.

வியாபாரிகள் சங்கத்தின் பிரதிநிதிகள் செய்சியாளர் சந்திப்பு

author img

By

Published : Oct 11, 2020, 11:59 PM IST

கோயம்பேடு சந்தையில் இருந்து கரோனா பரவியது என கடந்த மே மாதத்தில் பரவிய செய்திகள் அனைத்தும் தவறானது என கோயம்பேடு அனைத்து வியாபாரிகள் சங்கத்தின் பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர். சேப்பாக்கத்தில் உள்ள சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அனைத்து வியாபாரிகள் சங்கத்தின் பிரதிநிதிகள், கோயம்பேடு சந்தையின் தற்போதைய கள நிலவரத்தைப் பகிர்ந்து கொண்டனர்.

அப்போது அவர்கள் கூறுகையில், அனைத்து கடைகளும் மறுபடியும் திறக்கப்பட்டுவிட்டன என அனைவரும் தற்போது எண்ணிக்கொண்டிருக்கின்றனர். மலர் மற்றும் கனி அங்காடிகள் இன்னும் திறக்கப்படவில்லை. மேலும், மொத்த வியாபாரிகளுக்கு மட்டுமே வியாபாரம் செய்துகொள்ள அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது, அவர்களிடமிருந்து வாங்கி விற்கும் சிறு மொத்த வியாபாரிகளுக்கு அனுமதி இன்னும் வழங்கப்படவில்லை.

கோயம்பேடு சந்தையில் சொந்த கடைகளை வைத்துக்கொண்டு தாங்கள் அகதிகள் போல அங்குமிங்கும் அலைந்து கொண்டு இருப்பதாக வேதனைத் தெரிவித்தனர். கரோனா பரவலில் அரசாங்கம் முதலில் சரியான நடவடிக்கை எடுத்திருந்தால் திருமழிசை, மாதாவரம் போன்ற இடங்களுக்கு சென்று இருக்க மாட்டோம்.

திருமழிசை, மாதாவரம் ஆகிய இடங்களில் பரவாத கரோனா கோயம்பேட்டில் மட்டும் பரவுகிறதா? எனக் கேள்வி எழுப்பினர். கோயம்பேடு சந்தையை மூடும்போது வியாபாரிகளுக்கு கரோனா இல்லை. சாலையோரத்தில் இருந்த ஒருவருக்கு மட்டுமே கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.

இதைக் காரணம் காட்டி சந்தையை மூடிவிட்டனர். அரசாங்கம் எடுத்த முன்னெச்சரிக்கை காரணமாக இதை ஒப்புக்கொண்டோம். மூடிய சந்தையை இன்னும் முழுமையாக திறக்கவில்லை. காய்கறி வளாகம் முழுமையாக திறந்தாலும், பழம், பூ விற்பனை வளாகம் இன்னும் திறக்கப்படவில்லை.

விரைவில் திறந்து விடுவார்கள் என எதிர்பார்த்து நாள்தோறும் காத்திருக்கிறோம். கோயம்பேடு சந்தைக்கு வாங்க வருபவர்கள் மூலம்தான் கரோனா பரவுகிறது. அங்கு இருக்கும் வியாபாரிகள் மூலம் கரோனா பரவுகிறது என்பது தவறு. யாரோ ஓரிருவர் தவறான செய்திகளை தருகின்றனர். அது ஊடகத்தில் வெளியாகிறது.

வியாபாரிகள் சங்கத்தின் பிரதிநிதிகள் செய்சியாளர் சந்திப்பு

கோயம்பேடு சந்தையை முழுமையாகத் திறப்பது குறித்து கேட்டால், அமைச்சர்கள் அந்த செய்தியைக் காட்டி தட்டிக் கழிக்கின்றனர். இந்த கடைகளை நம்பி இருக்கும் வியாபாரிகளின் வாழ்வாதாரம் முழுமையாக பாதிக்கப்பட்டு இருக்கிறது. மாநகராட்சி என்ன மாதிரியான விதிமுறைகள் அறிவுறுத்தினாலும் அதை தாங்கள் கட்டாயம் பின்பற்றுவதாகவும், விரைவில் கடைகள் திறக்க அனுமதித்தால் நன்றாக இருக்கும் என்றும் அவர்கள் கோரிக்கைவிடுத்தனர்.

இதையும் படிங்க:கட்டுப்பாடுகளுடன் திறக்கப்பட்ட கோயம்பேடு சந்தை.. வியாபாரிகள் மகிழ்ச்சி..!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.