ETV Bharat / state

கரோனா பாதிப்பு உயர்வு - கோயம்பேடு சந்தை முடக்கப்படுமா?

author img

By

Published : May 1, 2020, 5:43 PM IST

சென்னை: கோயம்பேடு சந்தையில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே இருப்பதால், அரசு அலுவலர்களால் இந்த சந்தைக்குச் சீல் வைக்க வாய்ப்புள்ளதாக வியாபாரிகள் கூறுகின்றனர்.

கோயம்பேடு சந்தை
கோயம்பேடு சந்தை

சென்னை மாநகரில் வசிக்கும் பொதுமக்கள் அனைவரும் காய்கறிகள், மளிகைப் பொருள்கள் உள்ளிட்டவைகளை வாங்க, மொத்தச் சந்தையாக கோயம்பேடு சந்தை விளங்குகிறது .

இந்தச் சந்தையில் இதுவரை 38க்கும் மேற்பட்டோருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இங்கு கரோனா எண்ணிக்கை குறையும் என எதிர்பார்த்த நிலையில், கடந்த சில நாள்களாக அதிகரித்து வருகிறது.

இது குறித்து நம்மிடம் பேசிய கோயம்பேடு மொத்தச் சந்தை சங்க நிர்வாகி கூறுகையில், 'கோயம்பேடு சந்தையில் இதுவரை எங்களுக்குத் தெரிந்து 38 பேர் வரை கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்ட தொடர்புகள் பற்றி, விசாரித்து இன்னும் அதிகப்படியான சோதனைகள் மேற்கொள்ளப்பட்டால், மேலும் சில நபர்களுக்குக் கரோனா தொற்று இருப்பது தெரியவரும்.

பொதுமக்கள் நலன் கருதி, அரசு என்ன முடிவு எடுத்தாலும் அதனை ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும்' என்றார்.

கோயம்பேடு சந்தையில் மொத்தம் 18 நுழைவு வாயில்கள் உள்ளன. இவற்றில் வெளியூர்களில் இருந்து காய்கறிகள் ஏற்றி வரும் லாரிகள், வியாபாரிகள், பொதுமக்கள், சிறு வியாபாரிகள் என நூற்றுக்கணக்கானோர் நடமாடுகிறார்கள்.

இந்நிலையில் கோயம்பேடு சந்தையில் கரோனா தொற்று அதிகரித்திருப்பதில் ஆச்சர்யம் இல்லை என்கின்றனர், வியாபாரிகள். கரோனா எண்ணிக்கை அதிகரிப்பால், விரைவில் கோயம்பேடு சந்தை மாநகராட்சி அலுவலர்களால் சீல் வைக்கப்பட வாய்ப்புள்ளதாக வியாபாரிகள் கூறுகின்றனர்.

இதையும் படிங்க: கோயம்பேடு மார்க்கெட்டில் காவல் ஆணையர் ஆய்வு!

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.