ETV Bharat / state

ஆயுத பூஜை விற்பனை அமோகம்: களைகட்டும் கோயம்பேடு சந்தை! - கோயம்பேடு சந்தையில் ஆயுத பூஜை விற்பனை அமோகம்

சென்னை: ஆயுத பூஜையை முன்னிட்டு கோயம்பேடு சந்தையில் ஏராளமான மக்கள் பூஜைக்குத் தேவையான பொருட்களை குடும்பத்துடன் வாங்கிச் சென்றுவருகின்றனர்.

koyambedu daily market status at ayutha pooja
author img

By

Published : Oct 7, 2019, 12:17 PM IST

மக்கள் தங்கள் தொழிலை வணங்கும் வகையில் மாநிலம் முழுவதும் பழம், பூ, வெற்றிலை பாக்கு, பொரிகடலை ஆகியவற்றை வைத்து இன்று ஆயுதபூஜை பண்டிகையை கொண்டாடிவருகின்றனர்.

கோயம்பேடு காமராசர் மலர் சந்தை வளாகத்தில் பூஜைப் பொருள்கள் விற்பனை செய்வதற்காக தற்காலிக கடைகள் போடப்பட்டுள்ளன. இதில் பொதுமக்கள், வியாபாரிகள், தொழிலாளர்கள் எனப் பல்வேறு தரப்பினரும் ஆர்வத்துடன் வந்து தங்களுக்குத் தேவையான பொருட்களை வாங்கிச் செல்கின்றனர்.

பூஜைப் பொருள்களான பூசணிக்காய் கிலோ 15 ரூபாய்க்கும் வாழைக் கன்று 20 ரூபாய்க்கும் தேங்காய் 25 முதல் 35 ரூபாய் வரையும் விற்பனை செய்யப்படுகிறது. பொரி படி 20 ரூபாய்க்கும் பொரி, கடலை, நாட்டுச்சக்கரை, அவல் உள்ளிட்ட நான்கு பொருட்கள் சேர்த்த பொட்டலம் 25 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அலங்கார பூவான சாமந்தி கிலோ 200 ரூபாய்க்கும் அரளி 300 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

கோயம்பேடு சந்தையில் ஆயுத பூஜை விற்பனை அமோகம்

பண்டிகை காலம் என்பதால் பூஜைப் பொருட்களின் விலை அதிகரித்துள்ளதாக பொதுமக்கள் தெரிவித்தாலும் பலரும் தங்களது குடும்பத்தினருடன் சென்று பூஜைக்கான பொருட்களை ஆர்வமாக வாங்கிச் சென்றுவருகின்றனர்.

இதையும் படிங்க: ஆயுதபூஜை: பரமத்தி வேலூரில் வாழைத்தார் ஏலம் வீழ்ச்சி!

Intro:

சென்னை:
ஆயுத பூஜை பண்டிகை இன்று கொண்டாடப்படுவதை முன்னிட்டு சென்னை கோயம்பேடு சந்தையில் ஏராளமான மக்கள் பூஜைக்கு தேவையான பொருட்களை குடும்பத்துடன் வாங்கிச் சென்றனர்.
Body:

தங்கள் தொழிலை வணங்கும் வகையில் தமிழகம் முழுவதும் இன்று ஆயுதபூஜை பண்டிகை கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் மக்கள் பழம், பூ, வெற்றிலை பாக்கு, பொரிகடலை ஆகியவற்றை வைத்து வழிபடுவது வழக்கம். கோயம்பேடு காமராசர் மலர் சந்தை வளாகத்தில் பூஜை பொருட்கள் விற்பனை செய்வதற்காக தற்காலிக கடைகள் போடப்பட்டுள்ளன. இதில் பொது மக்கள், வியாபாரிகள், தொழிலாளர்கள் என பல்வேறு தரப்பினரும் ஆர்வத்துடன் வந்து தங்களுக்குத் தேவையான பொருட்களை வாங்கிச் செல்கின்றனர்.

பூசணிக்காய் கிலோ 15 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. வாளைகன்று 20 ரூபாய்க்கும் தேங்காய் 25 முதல் 35 ரூபாய் வரையும் விற்பனை செய்யப்படுகிறது. பொரி படி 20 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. பொரி, கடலை, நாட்டுச்சக்கரை, அவல் உள்ளிட்ட நான்கு பொருட்களை சேர்த்து பொட்டலம் 25 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
சாமந்தி பூ கிலோ 200 ரூபாய்க்கும், அரளி 300 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.மல்லிப்பூ 300 கிராம் 300 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. மக்கள் அதிகளவில் பூக்கள் வாங்குவதால் பூக்களின் விலை உயர்ந்ததாகவும், விஜயதசமி பண்டிகையை முன்னிட்டு நாளை வரை பூக்கள் விற்பனை சிறப்பாக நடைபெறும் என்றும் அதன்பின் பூக்களின் விலை படிப்படியாக குறையும் என்றும் வியாபாரிகள் கூறுகின்றனர்.Conclusion:Visual via mojo
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.