சென்னை: மேற்கு வங்க மாநிலத்தைச் சோ்ந்தவா் மண்டல் சிப்தாஸ் (வயது 73). புற்றுநோய் சிகிச்சைக்காக இவர் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு வேலூா் சிஎம்சி மருத்துவமனைக்கு வந்து சிகிச்சைப் பெற்றுள்ளார்.
தொடர்ந்து, மண்டல் சிப்தாஸ்க்கு சிகிச்சை முடிந்த நிலையில், மேற்கு வங்கம் செல்வதற்காக நேற்று (அக்.16) சென்னை உள்நாட்டு விமான நிலையம் வந்தாா். சென்னையிலிருந்து இரவு ஏழு மணிக்கு கொல்கத்தா செல்லும் ஸ்பைஜெட் விமானத்தில் பயணிக்க டிக்கெட் எடுத்துவிட்டு, பயணிகள் பாதுகாப்பு சோதனைப் பகுதியில் அவர் வரிசையில் நின்றிருந்தார்.
அப்போது திடீரென மயங்கி விழுந்துள்ளார். இதையடுத்து விமான நிலைய மருத்துவக் குழுவினா் விரைந்து வந்து அவரை பரிசோதித்ததில், மாரடைப்பால் அவர் உயிரிழந்தது தெரிய வந்தது.
பின்னர் சென்னை விமானநிலைய காவல் துறையினர் அவரது உடலைக் கைப்பற்றி உடற்கூராய்விற்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதையும் படிங்க: சென்னையில் அதிகரிக்கும் கரோனா - குறையும் உள்நாட்டு விமான பயணிகள் எண்ணிக்கை!