ETV Bharat / state

தென்னிந்தியாவில் நான் தான் No.1 டாக்டர்.. கோட் சூட்டுடன் நூதன மோசடி.. சென்னையில் போலி மருத்துவர் கைது! - fake

தென்னிந்தியாவின் நம்பர் 1 மருத்துவர் நான் தான் எனக் கூறி கால் டாக்ஸி ஓட்டுனர்களிடம் நூதன முறையில் பணத்தை பறித்து வந்த போலி மருத்துவரை சென்னை போலீசார் கைது செய்தனர்.

’தென்னிந்தியாவின் நம்பர் 1 மருத்துவர் நான் தான்' - போலி மருத்துவர் கைது

author img

By

Published : Jul 15, 2023, 10:49 PM IST

சென்னை: நுணி நாக்கில் ஆங்கிலம்,பார்ப்பதற்கு படித்தவர் போலவும், பணக்காரர் போலவும் தோற்றமளிக்க கோட் சூட்டு என, டிப் டாப் ஆக உடை அணிந்து தன்னை மருத்துவர் எனக் கூறிக்கொண்டு சென்னையில் 10க்கும் மேற்பட்ட இடங்களில் கைவரிசை காட்டி வலம் வந்த மோசடி மன்னனை கோடம்பாக்கம் தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர். தமிழகம் மட்டுமின்றி அண்டை மாநிலங்களான கேரளா, ஆந்திரா, கர்நாடகா என பல்வேறு மாநிலங்களில் கைவரிசை காட்டி வந்த டிப் டாப் ஆசாமி சஞ்சய் வர்மா பிடிபட்டார்.

திருப்பதியைச் சேர்ந்த கால் டாக்சி ஓட்டுநர் தினேஷ்குமார் சென்னை கோடம்பாக்கம் காவல் நிலையத்தில் கடந்த 9 ஆம் தேதி புகார் ஒன்றை அளித்துள்ளார். தினேஷ்குமார் திருப்பதியில் சொந்த காரை தனியார் டிராவல்ஸில் இணைத்து ஓட்டி வந்துள்ளார். அப்போது சென்னையிலிருந்து திருப்பதி செல்ல மருத்துவர் அர்ஜீன் என்பவர் காரை புக் செய்துள்ளார்.

கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் தன்னை அழைத்துக் கொண்டு ஆந்திராவில் உள்ள தனது சுபாஷினி மருத்துவமனைக்குச் சென்று விட்டு பின்னர் திருப்பதி செல்ல வேண்டும் என்று கூறியுள்ளார் மருத்துவர் அர்ஜீன். இதனார் ஓட்டுநர் தினேஷ்குமார் கடந்த 8 ஆம் தேதி அவரை கீழ்பாக்கத்திலிருந்து ஏற்றி கொண்டு கோடம்பாக்கத்தில் உள்ள தனியார் ஹோட்டல் ஒன்றில் நிறுத்தியுள்ளார். அங்கு மருத்துவர் சாப்பிட்டுவிட்டு பின்னர் மது அருந்தியதாகவும் தினேஷ்குமார் தெரிவித்துள்ளார்.

பின்னர் சிறிது நேரத்தில் அந்த மருத்துவர் தனது தொலைப்பேசி எண் சுவிட்ச் ஆப் ஆகி விட்டதாகவும், தன்னை ஜி பே மூலமாக 8 ஆயிரம் ரூபாய் பணம் அனுப்பக்கோரியும் உள்ளார். தனது நண்பரிடம் செல்போனில் பேசி வாங்கித் தருவதாக செல்போனை வாங்கி விட்டு மருத்துவர் தலைமறைவாகிவிட்டதாக அவர் தெரிவித்துள்ளார். தனது செல்போன் மற்றும் 8 ஆயிரம் பணத்தை மோசடி செய்த மருத்துவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி தினேஷ்குமார் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

இந்நிலையில் புகாரின் பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டு அஜய் வர்மா என்பவரைக் கைது செய்தனர். அவரிடம் மேற்கொண்ட விசாரணையில் அவர் சென்னை விருகம்பாக்கத்தில் வசித்து வருவதும், ஆயுர்வேதம் படித்து இருப்பதாக கூறி ஏமாற்றும் போலி டாக்டர் என்பது விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது.மேலும் தமிழகம் மட்டுமல்லாது அண்டை மாநிலங்களான கேரளா, ஆந்திரா, கர்நாடகா என பல்வேறு மாநிலங்களில் இவர் தன் கைவரிசையை காட்டியதும் விசாரணையில் தெரிய வந்தது.

ஆன்லைன் மூலமாக கால் டாக்ஸி நிறுவனங்களின் தொடர்பு எண்களை தேடி கண்டுபிடிக்கும் அஜய் வர்மா தான் தென்னிந்தியாவின் நம்பர் 1 மருத்துவர் எனவும் மருத்துவ ஆய்வுக்காக அங்குள்ள பிரபல மருத்துவமனைகளுக்கு சென்று விட்டு வருவதாகவும் கூறிவார். பின்னர் திரும்பி வரும்போது அருகில் உள்ள பிரசித்த பெற்ற கோவிலுக்கு செல்ல வேண்டும் எனக்கூறி டிரைவர்களை புக் செய்து கீழ்பாக்கம் அரசு மருத்துவமனை, ராஜீவ்காந்தி மருத்துவமனைக்கு டிரைவர்கள் வரவழைப்பது வழக்கம்.

கால் டாக்ஸியில் வரும் டிரைவர்கள் தன்னை பார்த்தவுடன் மருத்துவர் என நம்புவதற்காகப் பணக்காரத் தோற்றத்தில் டிப் டாப்பாக உடை அணிந்து இருப்பார். கையில் பிரேஸ்லெட்டும் கழுத்தில் தங்க நகைகளும் விலை உயர்ந்த கண்ணாடிகளும் நுனி நாக்கில் ஆங்கிலமும் என கால் டாக்ஸி டிரைவர்கள் ஆச்சரியப்படும் அளவிற்குச் செயல்பாடுகள் இருக்கும் என்பது தெரிய வந்தது.

காரில் பயணிக்கும் போது கால் டாக்ஸி ஓட்டுநர்கள் காதில் படும் வகையில் நடிகர்களுடனும், அரசியல் பிரமுகர்களுடனும் பேசுவது போன்ற செல்போன் உரையாடல்களை நிகழ்த்தி அவர்களை மயங்க செய்வார். இதனை நம்பிய கால் டாக்ஸி டிரைவர்கள் தங்களோடு பயணிப்பது மிகப்பெரிய பணக்காரர் என நம்புவார்கள்.

சிறிது நேரத்தில் பயணத்தின் போது தன்னுடைய உடைகளையும் பேச்சுகளையும் ஆசை வார்த்தைகளையும் நம்பிய கால் டாக்ஸி டிரைவர்கள் அஜய் வர்மாவின் வலையில் விழுந்த பிறகு, தனது நண்பர்கள் அல்லது தன் அலுவலகத்தில் வேலை பார்க்கும் பெண் ஊழியர், மற்றும் தனது சக மருத்துவர் ஆகியோருக்கு உடனடி பணத்தேவை வந்தது போல் செல்போன் உரையாடல் நிகழ்த்துவார் என கூறுவார்.

அப்போது கால் டாக்ஸி டிரைவரிடம் தன் கையில் காசு இருப்பதாகவும் ஜிபே, போன் பே ஆகியவை இல்லாத காரணத்தினால் கால் டாக்ஸி டிரைவர்கள் பணத்தை செயலியின் மூலம் உடனடியாக அனுப்ப முடியுமா என கேட்டு, குறிப்பிட்ட நம்பரை கொடுத்து பணத்தை அனுப்புமாறு சஞ்சய் வர்மா நூதன முறையில் மோசடி செய்துள்ளார் என்பது பாதிக்கப்பட்ட டிரைவர்கள் மூலம் தெரிய வந்துள்ளது.

அவ்வாறு பணத்தை அனுப்பும் கால் டாக்ஸி டிரைவர்களை தன்னை பிக்கப் செய்த இடத்திலிருந்து அருகில் இருக்கும் நட்சத்திர விடுதியில் நிறுத்தி உணவு அருந்தலாம் என அவர்களை அழைத்துச் செல்வதாகவும் தெரிய வந்துள்ளது. அவ்வாறு ஹோட்டலுக்கு உள்ளே வரும் கால் டாக்ஸி டிரைவர்களின் கவனத்தை திசை திருப்பி பாத்ரூம் செல்வதாகவும், செல்போன் பேசிவிட்டு வருவதாகவும் கூறி தப்பித்து விடுவார் இந்த டிப்டாப் ஆசாமி சஞ்சய் வர்மா என்பது தெரிவந்துள்ளது.

அதையும் தாண்டி கால் டாக்ஸி டிரைவர்கள் உஷாராக இருந்தால் அவர்கள் சஞ்சய் வர்மா கூறிய நம்பருக்கு எவ்வளவு பணம் அனுப்பினார்களோ, அந்தப் பணத்திற்கு பதிலாக கள்ள நோட்டுகளை கொடுத்துவிட்டு நூதன முறையில் சஞ்சய் வர்மா தப்பித்துச் சென்று வந்துள்ளார் என்பது தெரியவந்துள்ளது.

சென்னையை பொறுத்தவரையில் கடந்த மார்ச் மாதம் 29ஆம் தேதி அசோக் நகர் காவல் நிலையத்தில் பிரபுராஜ் என்ற கால் டாக்ஸி டிரைவரிடம், சென்னை சென்ட்ரலில் இருந்து திண்டிவனம் செல்வதற்காக சஞ்சய் வர்மா கார் புக் செய்துவிட்டு, அசோக் நகரில் உள்ள தனியார் ஹோட்டலில் உணவு வாங்கித் தருவதாக கூறி ஆயிரம் ரூபாய் பணமும் ஒரு செல்போனும் மோசடி செய்துள்ளார். குறிப்பாக தனது நண்பனின் பிஎம்டபிள்யூ காருக்கு பெட்ரோல் போடுவதற்காக ஜி பேயில் பணம் அனுப்ப சொல்லி மோசடி செய்துள்ளார்.

இதே போன்று ராஜீவ் காந்தி மருத்துவமனையில் இருந்து மருத்துவர் எனக் கூறிக்கொண்டு வேளச்சேரியை சேர்ந்த நகைக்கடை உரிமையாளரிடம் 5 சவரன் நகையை மோசடி செய்துள்ளார். இதே போல நூதன முறையில் நான்கு தடவை ராஜீவ்காந்தி மருத்துவமனையில் மட்டுமே மோசடியில் ஈடுபட்டதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இவர்கள் அனைவரிடமும் தன்னை பணக்காரனைப் போல காட்டிக் கொண்டு அவர்களை நம்ப வைத்து பணத்தை மோசடி செய்து ஏமாற்றி தப்பிச்செல்லும் யுக்தியை பயன்படுத்தியே சஞ்சய் வர்மா தொடர்ந்து இச்செயலில் ஈடுபட்டு வந்துள்ளார்.மேலும் சென்னை கோயம்பேட்டில் கால் டாக்ஸி டிரைவர் சுதிர் என்பவரிடம் கள்ள நோட்டுகள் இருப்பதாக பார் ஊழியர் ஒருவர் கொடுத்த புகாரில் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. அப்போது டிப் டாப் ஆசாமி சஞ்சய் வர்மா கால் டாக்ஸி டிரைவர் சுதிரையும் ஜி பே மூலமாக 11 ஆயிரம் ரூபாய் பணத்தை ஏமாற்றியது தெரியவந்துள்ளது. ஆனால் சுதிர் ஜி பே மூலமாக கொடுத்த பணத்தை கேட்டதால் 11 ஆயிரம் ரூபாய்க்கு கள்ள நோட்டுகளை கொடுத்துவிட்டு சஞ்சய் வர்மா தப்பிச் சென்றுள்ளார்.

வழக்கம்போல் சஞ்சய் வர்மா ஹோட்டலில் சாப்பிட்டு செல்லலாம் என சுதிரை அழைத்துச் சென்று மது வாங்கியும் கொடுத்துள்ளார். அப்போது சஞ்சய் வர்மா திடீரென மாயமானதால் அவர் கொடுத்த பணத்தை சுதிர் பார் ஊழியரிடம் கொடுக்கும் போதுதான் கள்ள நோட்டு என்பது தெரிய வந்துள்ளது.

இவ்வாறாக பல்வேறு கால் டாக்ஸி டிரைவர்களை தொடர்ந்து மோசடி செய்து வந்த சஞ்சய் வர்மாவை கோடம்பாக்கம் போலீசார் செல்போன் ஐ எம் இ நம்பரை வைத்து கைது செய்தனர். மேலும் சஞ்சய் வர்மா குறித்து விசாரணை மேற்கொண்டதில் கேரளாவில் இதே போன்று கைவரிசை காட்டி தலச்சேரி பகுதியில் கடந்த டிசம்பர் மாதம் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் என்பதும் விசாரணையில் தெரிய வந்தது.

மேலும் சஞ்சய் வர்மா கோவாவில் உள்ள சூதாட்ட கிளப்புகளில் உறுப்பினராக இருந்து, சட்டவிரோதமாக ஆள் மாறாட்டம் செய்தும், கைமாற்றுவதையும் தொழிலாகக் கொண்டது தெரிய வந்துள்ளது. முக்கியமாக கள்ள நோட்டுகள் அச்சடிக்கும் மாபியாக்களுடன் சஞ்சய் வர்மாவிற்கு தொடர்பு இருப்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இவ்வாறாக கேரள வழக்கில் ஜாமினில் வெளிவந்த சஞ்சய் வர்மா, மீண்டும் சென்னையில் கைவரிசையை காட்டத் தொடங்கியது தெரிய வந்துள்ளது. சென்னை போலீசார் நடத்திய துரித விசாரணையில் சஞ்சய் வர்மா மீண்டும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

சென்னையில் மட்டுமல்லாது தமிழகத்தில் இதுபோன்று எத்தனை கால் டாக்ஸி டிரைவர்களிடம் சஞ்சய் வர்மா கைவரிசை காட்டியுள்ளார் என்பது விசாரிக்கப்பட்டு வருகிரது. கள்ள நோட்டு அச்சடிக்கும் மாபியாக்களுடன் தொடர்பு கொண்டவர், பல மாநில மொழிகளில் போலி ஆதார் அட்டைகள் பயன்படுத்தி ஏமாற்றுபவர், போலி மருத்துவர், கடந்த 1 வருடத்தில் சென்னையில் 10க்கும் மேற்பட்ட இடங்களில் கைவரிசை காட்டியுள்ள சஞ்சய் வர்மாவின் செயல் சென்னை மக்களிடையே பெரும் பரபர்ப்பை ஏற்ப்படுத்தியுள்ளது.

கால் டாக்ஸி டிரைவர்கள் உஷாராக இருந்திருந்தால் மட்டுமே சஞ்சய் வர்மா கள்ள நோட்டுகளை பயன்படுத்தி தப்பிச் சென்றுள்ளாரா என்பது தெரிய வரும். மேலும் தமிழகத்தில் கள்ள நோட்டுகளை எங்கெங்கு புழக்கத்தில் விட்டுள்ளார் என போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.