ETV Bharat / state

மனைவியை கத்தியால் குத்தி கொலை செய்த கணவர் கைது! - police arrested husband

சென்னை : குடும்பத் தகராறில் மனைவியைக் கத்தியால் குத்தி கொலை செய்த கணவரை கைது செய்து போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

chennai
author img

By

Published : Mar 30, 2019, 5:42 PM IST

சென்னை கே.கே.நகரை அடுத்த நெசப்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர்கள் அருள்குமார்(24)-சந்தியா(20) தம்பதியினர். அருள்குமார் பொறியாளராக வேலை பார்த்து வருகிறார். இவர்கள் இருவரும் கடந்த ஜனவரி மாதம் காதல் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுடன் சந்தியாவின் தாய் சரிதா, தந்தை சங்கர் ஆகியோர் வசித்து வருகின்றனர்.

இந்நிலையில், இன்று 11 மணி அளவில் அருள்-சந்தியா இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த அருள்குமார் கத்தியால் சந்தியாவின் தொண்டையில் குத்தியுள்ளார். இதனால் சம்பவ இடத்திலேயே சந்தியா உயிரிழந்தார். இதனைத் தடுக்க முயன்ற சந்தியா தாயார் சரிதாவுக்கு கையில் வெட்டுக் காயம் ஏற்பட்டுள்ளது.

பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த போலீஸ் உதவி ஆணையர் வின்செண்ட் ஜெயராஜ் மற்றும் காவல் ஆய்வாளர் பிராங்க் ரூபன் சந்தியாவின் உடலைக் கைபற்றி பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் அருள் குமாரை கைது செய்த போலீஸார், குடும்பத் தகராறால் இந்த கொலையை செய்தாரா அல்லது வேறு ஏதும் காரணமா என விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கேகே நகரில் பயங்கரம்  கத்தியால் குத்தி மனைவியை கொலை செய்த கணவர் கைது.
கேகே நகர் அடுத்த நெசப்பாக்கம் பிள்ளையார் கோயில் தெருவைச் சேர்ந்தவர் அருள்குமார் வயது24 எலக்ட்ரிக்கல் என்ஜினீயர். இவரது மனைவி சந்தியா வயது20 .இவர்கள் இருவரும் கடந்த ஜனவரி மாதம் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். சந்தியாவுடன் அவரது தாய் சரிதா தந்தை சங்கர் ஆகியோர்  உடன் வசித்து வந்தனர். இந்தநிலையில் இன்று காலை 11மணி அளவில் அருள்குமார் மனைவி சந்தியா இடையே தகராறு ஏற்பட்டது.இதில் ஆத்திரமடைந்த அருள்குமார்  கத்தியால் தொண்டையில் குத்தினார்.இதில் சம்பவ இடத்திலேயே சந்தியா சுருண்டு விழுந்து இறந்தார். இதை தடுக்க முயன்ற சந்தியாவின் தாய் சரிதாவுக்கு கையில் வெட்டு காயம் ஏற்பட்டது.சம்பவ இடத்திற்கு வந்த உதவி கமிஷனர் வின்சென்ட் ஜெயராஜ் இன்ஸ்பெக்டர் பிராங்க் ரூபன் ஆகியோர் அருளண்குமாரை கைது செய்தனர். மேலும் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். குடும்ப தகராறில் மனைவியை கொலை செய்தாரா அல்லது வேறு ஏதாவது பிரச்சனை காரணமா என்கிற கோனத்தில் போலிசார் அருள்குமாரிடம்  தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.  கணவன் மனைவியை குத்தி கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.   
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.