ETV Bharat / state

'அறிவியல் திறனறிவுத் தேர்வு அடுத்தாண்டு முதல் மாநில மொழிகளில் நடைபெறும்' - மத்திய அரசு உறுதி

author img

By

Published : Nov 9, 2021, 7:45 PM IST

அறிவியல் திறனறிவுத் தேர்வு அடுத்த ஆண்டு முதல் அந்தந்த மாநில மொழிகளில் நடைபெறும் என மத்திய அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் உறுதியளித்துள்ளது.

மத்திய அரசு உறுதி
மத்திய அரசு உறுதி

சென்னை: மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை சார்பில் கிஷோர் வைக்யானிக் புரோட்சகான் யோஜனா(Kishore Vaigyanik Protsahan Yojana) திட்டம் மூலம் அறிவியலில் ஆர்வமுள்ள பதினோராம் மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு திறனறிவுத் தேர்வு நடத்தி, தகுதியானவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது.

இந்த திறனறிவுத் தேர்வானது ஆங்கிலம் மற்றும் இந்தி மொழிகளில் நடைபெறும் என அறிவிக்கபட்டுள்ளது.

இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து ராமநாதபுரத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் திருமுருகன் தாக்கல் செய்த பொது நல மனுவில், "தமிழ்நாட்டில் 60 விழுக்காடு மாணவர்கள் தமிழ் வழியில் படித்துள்ளதால், அந்தந்த மாநில மொழிகளில் தேர்வு நடத்த உத்தரவிட வேண்டும்" எனத் தெரிவித்திருந்தார்.

இந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி அமர்வு, பிற மொழி பேசுபவர்களுக்கும் சம வாய்ப்பு வழங்க வேண்டும் எனக் கூறி திறனறிவுத் தேர்வை நிறுத்தி வைத்து உத்தரவிட்டார்.

அடுத்தாண்டு முதல் அனைத்து மொழிகளிலும் திறனறித்தேர்வு

இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்ஜீப் பானர்ஜி மற்றும் நீதிபதி ஆதிகேசவலு அடங்கிய அமர்வில் இன்று (நவ.9) மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது, மத்திய அரசு சார்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல், மாநில மொழிகளில் திறனறிவுத் தேர்வை நடத்துவதற்கான செயல்முறை 5 முதல் 6 மாதங்கள் ஆகும் என்பதால், அடுத்த ஆண்டு முதல் அனைத்து மொழிகளிலும் திறனறிவுத் தேர்வு நடத்தப்படும் என உறுதியளிக்கபட்டது.

இது சம்பந்தமாக மனுவாக தாக்கல் செய்ய மத்திய அரசுத் தரப்புக்கு அறிவுறுத்திய நீதிபதிகள், விசாரணையை நவம்பர் 15ஆம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.

இதையும் படிங்க: கனமழை பெய்தால் எதிர்கொள்ள தேசியப் பேரிடர் மீட்புக்குழு தயார் - அமைச்சர் கேகேஎஸ் எஸ்ஆர். ராமச்சந்திரன்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.