சென்னை: அம்பத்தூர் அத்திப்பட்டு பகுதியைச் சேர்ந்தவர், ஜெயராமன். இவர் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். சென்னை சிந்தாதிரிப்பேட்டையைச் சேர்ந்த தேவராஜ் என்பவருடன் இணைந்து நிலம் வாங்கி விற்பனை செய்து வந்துள்ளார்.
இதன் காரணமாக ஜெயராமன் மற்றும் தேவராஜ் இடையே பணம் கொடுக்கல், வாங்கல் பிரச்னையில் ரூ.20 லட்சம் பணத்தை தராமல் இருந்துள்ளார். இதுகுறித்து தேவராஜ் பல முறை ஜெயராமனிடம் தனது பணத்தினை தரும்படி கேட்டு வந்து உள்ளார்.
ஆனால், ஜெயராமன் பணம் தராமல் கடந்த 3 ஆண்டுகளாக பணம் தராமல் போக்கு காட்டி வந்துள்ளார். இதனால் இருவருக்குமிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த தேவராஜ், ஜெயராமன் நேற்று இரவு மயிலாப்பூரில் தொழில் சம்பந்தமாக சென்ற நிலையில் அங்கு வைத்து தனது கூட்டாளிகளான சிந்தாதிரிப்பேட்டை ஹேமநாதன், பொன்னேரியைச் சேர்ந்த திவாகர், பாலாஜி, அத்திப்பேட்டையைச் சேர்ந்த ஸ்டீபன் ராஜ், தினேஷ் குமார் ஆகியோருடன் சேர்ந்து கத்தி முனையில், காரில் கடத்தி உள்ளார்.
தான் கடத்தப்பட்டதை மனைவி சிவரஞ்சனிக்கு தெரியப்படுத்தியுள்ளார், ஜெயராமன். இதனால் அதிர்ச்சியடைந்த சிவரஞ்சனி உடனடியாக அம்பத்தூர் தொழிற்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். மனைவி சிவரஞ்சனி கொடுத்த புகாரின் தீவிர விசாரணை மேற்கொண்டு காவல்துறையினர் மயிலாப்பூரில் கடத்திவிட்டு அம்பத்தூரில் எஸ்டேட் பகுதியில் பதுங்கி இருந்த கடத்தல்காரர்களை அதிரடியாக கைது செய்து ஜெயராமனை மீட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட 6 பேரிடமும் அம்பத்தூர் தொழிற்பேட்டை காவல்துறையினர் தீவிர விசாரசணை மேற்கொண்டு வருகின்றனர். விசாரணைக்குப் பின்னர் அம்பத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இதையும் படிங்க:CCTV: வழி விடச் சொன்ன இளைஞர்கள் மீது சரமாரி தாக்குதல்