ETV Bharat / state

கடனுக்கு வட்டி கட்டாத உணவக அதிபர் - ஆட்டோவில் கடத்திச் சென்ற வட்டி பிரபாகர்! - ஓட்டல் அதிபரை ஆட்டோவில் கடத்திச் சென்ற நபர்

சென்னை: கடனுக்கு வட்டி கட்டாததால் உணவக அதிபரை ஆட்டோவில் கடத்திச் சென்ற நபரை காவல் துறையினர் கைது செய்தனர்.

Kidnap issue
Kidnap issue
author img

By

Published : Dec 17, 2019, 2:38 PM IST

சென்னை நொளம்பூர் மாதா கோவில் நான்காவது தெருவைச் சேர்ந்தவர் சக்தி முருகன் (30). இவர் பல்லாவரத்தில் ஹோட்டல் ஒன்றை மூன்று வருடமாக நடத்தி வருகிறார். இவர் சென்னை அமைந்தகரையைச் சேர்ந்த பிரபாகர் என்பவரிடம் ரூ.50 லட்சத்தை 5 விழுக்காடு வட்டிக்கு கடனாக வாங்கினார். சக்தி முருகன் கடந்த இரண்டு மாதம் வட்டி பணம் கட்டவில்லை.

இதனால், வட்டி கட்டும்படி கேட்டும் தரவில்லை. பிறகு, பிரபாகர் சக்தி முருகனை நேரில் பார்க்க வேண்டும் எனக் கூறியுள்ளார். நுங்கம்பாக்கம் வள்ளுவர் கோட்டம் ஹைரோட்டில் சக்தி முருகன் வந்ததும், பிரபாகர் அவரை அடித்து, உதைத்து கத்தியை காட்டி மிரட்டி, ஆட்டோவில் கடத்திச் சென்றார்.

பிறகு முகப்பேர் பகுதிக்கு அழைத்து, ஆட்டோவில் வைத்து அடித்து உதைத்து உள்ளார். அண்ணாநகர் ரவுண்டானா அருகில் ஆட்டோ சென்ற போது சக்தி முருகன் காப்பாற்றுங்கள் எனக் கூச்சலிட்டுள்ளார்.

ஆட்டோவில் கடத்திச் சென்ற நபரை காவல் துறையினர் கைது செய்தனர்

பொதுமக்கள் காவல் துறை கட்டுப்பாட்டு அறைக்குப் போன் செய்துள்ளனர். அண்ணாநகர் காவல் துறையினர் வந்து சக்தி முருகனை மீட்டனர். பின்னர், பிரபாகரை நுங்கம்பாக்கம் காவல் துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க:

'நெகிழிகளுக்கு மாற்று சணல்' - அட்டகாசமான கண்காட்சி

Intro:Body:கொடுத்த கடனுக்கு வட்டி கட்டாததால் ஓட்டல் அதிபரை ஆட்டோவில் கடத்திச் சென்ற நபரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சென்னை நொளம்பூர் மாதா கோவில் 4-வது தெருவைச் சேர்ந்தவர் சக்தி முருகன் (30). இவருக்கு சொந்த ஊர் மதுரை. இவர் பல்லாவரத்தில் தனியார் ஹோட்டல் ஒன்றை 3 வருடமாக நடத்தி வருகிறார்.

இவர் சென்னை அமைந்தகரையைச் சேர்ந்த பிரபாகர்என்பவரிடம் ரூ. 50 லட்சம் 5 சதவீதம் வட்டிக்கு கடனாக வாங்கினார். மாதம் ரூ.1.5 லட்சம் வட்டி கட்டி வருவதாக தெரிகிறது. சக்தி முருகன் கடந்த 2 மாதம் வட்டி பணம் கட்டவில்லை.

இதனால் வட்டி கட்டும்படி கேட்டும் தரவில்லை. பிறகு பிரபாகர் அவருக்கு நேரில் பார்க்க வேண்டும் வரும் கூறியுள்ளார். நுங்கம்பாக்கம் வள்ளுவர் கோட்டம் ஐரோட்டில் சக்தி முருகன் வந்ததும் பிரபாகர் அவரை அடித்து உதைத்து கத்தி காட்டி மிரட்டி ஆட்டோவில் கடத்தி சென்றார்.

பிறகு முகப்பேர் பகுதிக்கு அழைத்து ஆட்டோவில் வைத்து அடித்து உதைத்து உள்ளார். அண்ணாநகர் ரவுண்டானா அருகில் ஆட்டோ சென்ற போது சக்தி முருகன் காப்பாற்றுங்கள் என கூச்சலிட்டுள்ளார்.

பொதுமக்கள் காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு போன் செய்துள்ளனர். அண்ணாநகர் போலீசார் வந்து சக்தி முருகனை மீட்டனர். பிரபாகரை பிடித்தனர். விசாரணையில் நுங்கம்பாக்கத்தில் கடத்தல் நடந்ததால் நுங்கம்பாக்கம் போலீசாரிடம் ஒப்படைத்தனர். நுங்கம்பாக்கம் போலீசார் பிரபாகரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.