ETV Bharat / state

சந்தீப் மேத்தாவின் முன்ஜாமின் மனு தள்ளுபடி - உயர் நீதிமன்றம் அதிரடி!

சென்னை: கேரளாவில் செயல்பட்டுவரும் ஜெயின் கோரல் கேவ் என்ற கட்டுமான நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் கோரிய முன்ஜாமின் மனுவைத் தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

author img

By

Published : Nov 12, 2019, 6:08 PM IST

Kerala Sandeep metha anticipatory bail petition dismissed

கொச்சி மராடு பகுதியில் கடலோர ஒழுங்குமுறை மண்டல விதிகளை மீறியதாக நான்கு அடுக்குமாடி குடியிருப்புகளை இடிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்நிலையில், ஜெயின் கட்டுமான நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் சந்தீப் மேத்தா, தான் சென்னையை தலைமையிடமாகக் கொண்ட ஜெயின் நிறுவனத்தில் இயக்குநராக இருப்பதாகவும், கொச்சியில் உள்ள கிளை நிறுவனத்தை கவனித்து வருவதால், தன்னைக் காவல் துறை தவறான வழக்கில் கைது செய்ய முயற்சிப்பதாகவும் கூறி முன்ஜாமின் கேட்டு மனு தாக்கல் செய்திருந்தார்.

இவ்வழக்கை விசாரித்த நீதிபதி சி.வி. கார்த்திகேயன், முதற்கட்டமாக நான்கு வாரத்திற்கு சந்தீப் மேத்தாவுக்கு முன்ஜாமின் வழங்கி கடந்த மாதம் உத்தரவிட்டார். இந்த வழக்கில் சில மாற்றங்கள் செய்யக்கோரி மனுதாரர் சார்பில் மீண்டும் உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்த அரசு வழக்கறிஞர், கேரளாவில் செயல்பட்டுவரும் கோரல் கேவ் நிறுவனத்தின் மீதான வழக்கை மறைத்து, சந்தீப் மேத்தா முன்ஜாமின் பெற்றுள்ளார் என்பதால் அவரது முன்ஜாமினை ரத்து செய்து வழக்கைத் தள்ளுபடி செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். இதையடுத்து, சந்தீப் மேத்தாவுக்கு வழங்கப்பட்ட முன்ஜாமினை ரத்து செய்து நீதிபதி உத்தரவிட்டார்.

இதையும் படிங்க: ’ஆம்பூர் ஸ்டார் பிரியாணி’ பெயரை பயன்படுத்த மற்ற உணவகங்களுக்குத் தடை!

Intro:Body:கேரளாவில் செயல்பட்டு வரும் ஜெயின் கோரல் கேவ் கட்டுமான நிறுவனத்தில் மேலான்மை இயக்குநரின் முன்ஜாமீன் கோரிய வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

கொச்சி மராடு பகுதியில் கடலோர மண்டல ஒழுங்குமுறை மண்டல விதிகளை மீறியதாக புகார் எழுந்ததையடுத்து, விதிகளை மீறி சட்டவிரோதமாக கட்டப்பட்ட 4 அடுக்குமாடி குடியிருப்பை இடிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்நிலையில், ஜெயின் கட்டுமான நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் சந்தீப் மேத்தா, தான் சென்னையை தலைமையிடமாக கொண்ட ஜெயின் நிறுவனத்தில் இயக்குநராக இருப்பதாவும், கொச்சியில் உள்ள கிளை
நிறுவனத்தை கவனித்து வருவதால் தன்னை காவல்துறை தவறான வழக்கில் கைது செய்ய முயற்சி செய்வதால் தனக்கு முன்ஜாமீன் வழங்க வேண்டும் என வழக்கு தாக்கல் செய்தார்.

இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சி.வி.கார்த்திகேயன், முதல்கட்டமாக 4 வாரத்திற்கு முன்ஜாமீன் வழங்கி கடந்த மாதம் உத்தரவிட்டார். இந்த வழக்கில் சில மாற்றம் செய்யக்கோரி மனுதாரர் சார்பில் மீண்டும் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்த அரசு வழக்கறிஞர், கேரளாவில் செயல்பட்டு வரும் கோரல் கேவ் நிறுவனத்தின் மீதான வழக்கை மறைத்து சந்தீப் மேத்தா முன்ஜாமீன் பெற்றுள்ளார். எனவே அவரது முன்ஜாமீனை ரத்து செய்து வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் என தெரிவித்தார்.

இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி, தன் நிறுவனத்தின் மீதான வழக்கை மறைத்து, சந்தீப் மேத்தாவுக்கு வழங்கப்பட்ட முன்ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.