சென்னை: சென்னையில் உள்ள பெரியார் திடலில் நடைபெற்ற வைக்கம் போராட்டம் நூற்றாண்டு சிறப்பு விழாவில், செய்தி மக்கள் தொடர்புத்துறையின் தமிழரசு அச்சகத்தின் சார்பில் தயாரிக்கப்பட்டுள்ள "வைக்கம் போராட்டம் (1924-2023) நூற்றாண்டு" மலரினை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்க, கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் பெற்றுக் கொண்டார்.
கேரள மாநிலம், கோட்டயம் மாவட்டம் வைக்கத்திலுள்ள மகாதேவர் கோயிலைச் சுற்றி அமைந்துள்ள தெருக்களில் ஒடுக்கப்பட்டவர்கள் நடப்பதற்குத் தடைவிதிக்கப்பட்டிருந்ததை நீக்கக் கோரி நடந்த வைக்கம் போராட்டத்தில், கேரளத் தலைவர்களின் அழைப்பின் பேரில் பெரியார் வைக்கம் சென்று, அந்தப் போராட்டத்திற்குத் தலைமை ஏற்றார்.
பின்பு பல நாட்கள் அங்குத் தங்கியிருந்து போராட்டத்தை ஒருங்கிணைத்து, அனைத்து மக்களிடமும் வைக்கம் போராட்டம் குறித்து தமது சீர்திருத்த, சமூக நீதிக் கருத்துக்கள் மூலம் பிரச்சாரம் செய்து, வைக்கம் போராட்டத்தை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றார். இந்த வைக்கம் போராட்டம் நடைபெற்று நூறு ஆண்டுகள் ஆகின்றது.
-
முன்னாள் எதிர்க்கட்சித் தலைவரும் திரைக்கலைஞருமான அன்பு நண்பர் கேப்டன் @iVijayakant அவர்கள் மறைவையொட்டி, இன்று சென்னை நந்தம்பாக்கத்தில் நடைபெறவிருந்த ‘வைக்கம் போராட்டம் நூற்றாண்டு சிறப்பு விழா’வானது ரத்து செய்யப்பட்டு, சென்னை பெரியார் திடலில் உள்ள தந்தை பெரியார் நினைவிடத்தில்… pic.twitter.com/k6ND7HdJ3m
— M.K.Stalin (@mkstalin) December 28, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
">முன்னாள் எதிர்க்கட்சித் தலைவரும் திரைக்கலைஞருமான அன்பு நண்பர் கேப்டன் @iVijayakant அவர்கள் மறைவையொட்டி, இன்று சென்னை நந்தம்பாக்கத்தில் நடைபெறவிருந்த ‘வைக்கம் போராட்டம் நூற்றாண்டு சிறப்பு விழா’வானது ரத்து செய்யப்பட்டு, சென்னை பெரியார் திடலில் உள்ள தந்தை பெரியார் நினைவிடத்தில்… pic.twitter.com/k6ND7HdJ3m
— M.K.Stalin (@mkstalin) December 28, 2023முன்னாள் எதிர்க்கட்சித் தலைவரும் திரைக்கலைஞருமான அன்பு நண்பர் கேப்டன் @iVijayakant அவர்கள் மறைவையொட்டி, இன்று சென்னை நந்தம்பாக்கத்தில் நடைபெறவிருந்த ‘வைக்கம் போராட்டம் நூற்றாண்டு சிறப்பு விழா’வானது ரத்து செய்யப்பட்டு, சென்னை பெரியார் திடலில் உள்ள தந்தை பெரியார் நினைவிடத்தில்… pic.twitter.com/k6ND7HdJ3m
— M.K.Stalin (@mkstalin) December 28, 2023
வைக்கம் போராட்டத்தின் நூற்றாண்டினையொட்டி, தமிழ்நாடு அரசின் சார்பில் 2023ஆம் ஆண்டு மார்ச் 30ஆம் தேதி தொடங்கி ஓராண்டு காலம் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்படும் என்றும், போராட்டத்தின் வரலாற்றையும், வெற்றியையும் பொதுமக்கள் மற்றும் மாணவர்களுடன் சேர்ந்து கொண்டாடும் வகையில், தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் 2023 மார்ச் 30ஆம் தேதி விதி 110-இன் கீழ் 11 அறிவிப்புகளை முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்து இருந்தார்.
இதன்படி, வைக்கம் போராட்டத்தின் நூற்றாண்டு குறித்த சிறப்புக் கட்டுரைகளை பல்வேறு அறிஞர் பெருமக்களிடம் இருந்து பெற்று, அதனைத் தொகுத்து வைக்கம் போராட்டம் நூற்றாண்டு மலர் என்ற சிறப்பு மலர் ஒன்றினை தமிழ்நாடு அரசின் செய்தி மக்கள் தொடர்புத் துறையின் ‘தமிழரசு’ சார்பில் தயாரித்து வெளியிடப்படும் என்ற ஒரு அறிவிப்பும் அதில் இடம் பெற்றிருந்தது.
அந்த அறிவிப்பினை செயல்படுத்தும் விதமாக, தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தலைவராகவும், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அரசுச் செயலாளர் செல்வராஜ் துணைத் தலைவராகவும், இயக்குநர், செய்தி மக்கள் தொடர்புத்துறை இயக்குநர் மோகன் உறுப்பினர்-செயலராகவும், தமிழ் வளர்ச்சித்துறை இயக்குநர் அருள் உள்ளிட்டவர்கள் கொண்ட குழு அமைக்கப்பட்டு, செய்தி மக்கள் தொடர்புத்துறையால் இந்நூற்றாண்டு மலர் தயார் செய்யப்பட்டுள்ளது.
முதலமைச்சரின் அறிவிப்பின்படி, இக்குழு ஆலோசனைகளின் பேரில் தயாரிக்கப்பட்டுள்ள வைக்கம் போராட்டம் நூற்றாண்டு மலர் என்ற சிறப்பு மலரினை, முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிட, கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் அதனை பெற்றுக் கொண்டார்.
“பெரியாரும் வைக்கம் போராட்டமும்” என்ற நூலை கேரள மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் வெளியிட்டார். முன்னதாக பெரியார் நினைவிடத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் மலர் வளையம் வைத்து, மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
இவ்விழாவில், திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, அமைச்சர்கள் துரைமுருகன், கே.என்.நேரு, எ.வ.வேலு, எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், தங்கம் தென்னரசு, சாமிநாதன், மா.சுப்பிரமணியன், பி.கே. சேகர்பாபு, அன்பில் மகேஸ் பொய்யாமொழி, பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் ஆர். பிரியா, நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர்.பாலு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க: புற்றுநோய் தடுப்பு மருந்தான கேம்ப்டோதெசின் உற்பத்தியை அதிகரிக்க முயற்சி; தாவர செல்களை வளர்சிதை மாற்றத்திற்கு உட்படுத்தும் ஐஐடி மெட்ராஸ்..!