ETV Bharat / state

வாக்கு எண்ணிக்கை முறையாக நடக்கும் - உயர் நீதிமன்றம் நம்பிக்கை - சென்னை உயர்நீதிமன்றம்

சென்னை: வாக்கு எண்ணிக்கையை முறையாக நடத்த மாநில தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்கும் எனச் சென்னை உயர் நீதிமன்றம் நம்பிக்கைத் தெரிவித்துள்ளது.

mhc
mhc
author img

By

Published : Oct 12, 2021, 2:19 PM IST

தமிழ்நாட்டில் ஒன்பது மாவட்டங்களில் உள்ள ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு அக்டோபர் 6, 9 ஆகிய தேதிகளில் தேர்தல் நடத்தப்பட்டது. வாக்கு எண்ணிக்கை இன்று (அக்டோபர் 12) நடந்துவருகிறது.

இந்நிலையில், வாக்கு எண்ணிக்கையில் முறைகேடுகள் நடக்க வாய்ப்புள்ளதாகக் கூறி, வாக்கு எண்ணிக்கை முழுவதையும் காணொலியாகப் பதிவுசெய்ய உத்தரவிடக் கோரி திரிசூலம் ஊராட்சித் தலைவர் பதவி, ஊராட்சி உறுப்பினர் பதவி, ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் பதவி உள்ளிட்டவற்றிற்கு முறையே போட்டியிட்ட சரஸ்வதி, சத்தியநாராயணன், முத்துக்கனி ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தனர்.

இந்த வழக்கு நீதிபதிகள் மகாதேவன், ஆதிகேசவலு அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, வாக்கு எண்ணிக்கை ஏற்கனவே தொடங்கிவிட்டதாகக் குறிப்பிட்ட நீதிபதிகள், மாநில தேர்தல் ஆணையம், சட்டப்படி உரிய நடவடிக்கைகளை எடுக்கும் என நம்புவதாகக் கூறி, மனுவுக்கு இரு வாரங்களில் பதிலளிக்க மாநில தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்டனர்.

இதேபோல வாக்கு எண்ணிக்கையைக் காணொலியாகப் பதிவுசெய்யக் கோரிய வழக்குகளிலும் மாநில தேர்தல் ஆணையம் பதிலளிக்க நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இதையும் படிங்க: ஊழல் சமுதாயத்தை கரையான்போல் செல்லரித்துவிட்டது - சென்னை உயர் நீதிமன்றம்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.