சென்னை: உத்தரகாண்ட் மாநிலம் கேதார்நாத்தில், அக்டோபர் 18ஆம் தேதி புனித யாத்திரைக்குச் சென்ற ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் 7 பேர் உயிரிழந்தனர். இதில் தமிழ்நாட்டைச் சேர்ந்த கலா ரமேஷ், பிரேம்குமார் வாஞ்சிநாதன் மற்றும் சுஜாதா பிரேம்குமார் ஆகிய மூவரும் உயிரிழந்தனர்.
இதனையடுத்து உயிரிழந்தவர்களின் உடல்களை சென்னைக்கு கொண்டு வருவதற்கான முன்னெடுப்பு நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசு, உத்தரகாண்ட் மாநில அரசுடன் இணைந்து மேற்கொண்டது. இந்த நிலையில் நேற்று (அக் 20) உத்தரகாண்ட் மாநிலத்திலிருந்து இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானத்தில் உயிரிழந்த மூவரின் உடலும் சென்னை விமான நிலையம் வந்தடைந்தது.
இதனையடுத்து சென்னை விமான நிலையத்தில், வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் மூன்று பேரின் உடலுக்கும் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தி உறவினருக்கு ஆறுதல் கூறினார். பின்னர் அவர்களது உடல், சென்னை விமான நிலையத்தில் இருந்து ஆம்புலன்ஸ் மூலம் அவர்களின் வீடுகளுக்கு கொண்டு செல்லப்பட்டது.
இதையும் படிங்க: கேதார்நாத் ஹெலிகாப்டர் விபத்து: உயிரிழந்தவரின் அண்ணன் உருக்கம்